எப்படித்தான் செய்றீங்க.. ரொம்ப கஷ்டம் ப்பா.. அஜித்திடம் புலம்பிய ஷாலினி.. இது வேற நடந்திருக்கா?

சென்னை: அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகிவருகின்றன. இரண்டு படங்களுமே அடுத்த வருடம் ரிலீஸாகவிருக்கின்றன. இவற்றில் விடாமுயற்சி படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேசமயம் அந்தப் படம் கதை திருட்டு பிரச்னையில் மாட்டியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அஜித்திடம் ஷாலினி கூறிய விஷயம் குறித்து தெரியவந்திருக்கிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அ.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தொடங்கினாலும் இன்னமும் பணிகள் முடியவில்லை. இருந்தாலும் மகிழின் இயக்கம் என்பதால் இந்தப் படத்தின் மீது ஒட்டுமொத்த கோலிவுட்டின் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

ajith shalini vidaamuyarchi

வெளியான டீசர்: விடாமுயற்சி படம் வருமா வராதா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்திருந்த சூழலில்; யாரும் எதிர்பார்க்காத வகையில் சில நாட்களுக்கு முன்பு டீசர் வெளியானது. டீசரில் எந்த வசனமும் இல்லை. மாறாக அஜித்தின் ஸ்க்ரீன் பிரசென்ஸ் அட்டகாசமாக இருப்பதாகவும்; கேமரா மற்றும் மேக்கிங் தரமாக இருக்கும் என்பதை டீசர் உணர்த்தியிருப்பதாகவும் ரசிகர்கள் கூறினர். அதுமட்டுமின்றி படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளும் அருமையாக இருக்கும் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

கதை திருட்டு: இப்படி இந்த டீசர் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்ற சூழலில்; புதிதாக ஒரு பிரச்னையை படக்குழு சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்தான் இது என்றும்; ஆனால் அதற்கான உரிமத்தை முறைப்படி வாங்காததால் பிரேக் டவுன் படக்குழு; விடாமுயற்சி படக்குழுவிடம் 50 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அஜித்தின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி மட்டுமின்றி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடியும் தருவாயில் இருக்கிறது. தனது போர்ஷன் ஷூட்டிங் முடிந்துவிட்டதால் இப்போது தனக்கு பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்திவருகிறார் அவர். அந்தவகையில் இப்போது துபாயில் தீவிர பயிற்சியில் இருக்கிறார். மேலும் பாரிலோனாவில் தனது ரேஸிங் டீமோடு இருக்கும் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் ட்ரெண்டாகின.

ஷாலினி பற்றி: இந்நிலையில் பிரபல கார் ரேஸ் வீராங்கனையான அலிஷா அப்துல்லா ஒரு பேட்டியில் பேசுகையில், "அஜித்தின் ரேஸ் காரை ஒரு முறை ஷாலினி ஓட்டினார். அதில் ஒரு ரவுண்டு வந்தார். சாதாரண கார்களைப்போன்று ரேஸ் கார்களை எளிதாக ஓட்டிவிட முடியாது. ஏனெனில் அதன் ஸ்டீயரிங் உள்ளிட்டவைகள் வித்தியாசமாக இருக்கும். அந்த ரேஸ் காரை ஓட்டி முடித்துவிட்டு வந்த ஷாலினி அஜித்திடம், "எப்படித்தான் இந்த காரை ஓட்டுறீங்க. ரொம்ப கஷ்டம் ப்பா" என்று கூறியதாக அலிஷா தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X