Ajith - மருமகன்னா அவரை மாதிரி இருக்கணும்.. அப்படியொரு மனிதர் அவர்.. நெகிழ்ச்சியுடன் பேசிய அஜித் மாமனார்
சென்னை: Ajith (அஜித்) அஜித் குறித்து ஷாலினியின் தந்தை ஏ.எஸ்.பாபு நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கும் விஷயம் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்றால் அது அஜித்தும், ஷாலினியும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பதறிய அஜித்குமார்: அமர்க்களம் படத்தில் கத்தியை வைத்து ஷாலினியை அஜித் மிரட்டுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போது உண்மையாகவே கத்தி ஷாலினியின் கையை கீறிவிட்டது. இதனால் பதறிப்போன அஜித்குமார் உடனே முதலுதவி செய்தார். அன்றைய தின ஷூட்டிங் முடிந்த பிறகு பொக்கே அனுப்பி நலம் விசாரித்தார் அஜித்.
சீக்கிரம் ஷூட்டிங்க முடிங்க சரண்: அதனைத் தொடர்ந்து ஒருமுறை சரண், ஷாலினி, அஜித் மூன்று பேரும் அமர்ந்திருக்க, 'சரண் சீக்கிரம் ஷூட்டிங்க முடிச்சிடுங்க இல்லைனா நான் ஷாலினிய லவ் பண்ணிடுவேன் போல' என போட்டு உடைத்திருக்கிறார் அஜித். அப்போதுதான் அஜித்துக்குள் காதல் இருப்பதை ஷாலினி லேசாக உணர்ந்திருக்கிறார்.
காதலை சொன்ன அஜித்: தொடர்ந்து ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது ஒருகட்டத்தில் ஷாலினியிடம் அஜித் காதலை சொல்லிவிட்டார். உள்ளுக்குள் அஜித் மீது ஷாலினிக்கு ஆசை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனது அப்பாவிடம் பேச சொன்னார் ஷாலினி. அதேசமயம் அஜித் பேசுவதற்கு முன்பாகவே ஷாலினியே தனது தந்தையிடம் பேசியிருந்தார். அதனையடுத்து அஜித்தும் நேரடியாக ஷாலினி தந்தையிடம் பேச அவரும் ஒத்துக்கொண்டார். இதனையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
மாமனார் பேட்டி: இந்நிலையில் ஷாலினியின் தந்தையும், அஜித்தின் மாமனாருமான ஏ.எஸ்.பாபு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அதில் பேசிய பாபு, "அஜித்குமார் எப்போதுமே வேகம்தான். குடும்பத்தோடு எங்கள் வீட்டுக்கு வந்து கல்யாண தேதியை முடிவு செய்தார்கள். அன்று எப்படி இருந்தாரோ இப்பவரைக்கும் அப்படியேத்தான் இருக்கிறார். இரண்டு குடும்பங்களும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறோம். இரண்டு குடும்பங்களையும் அப்படி தாங்குகிறார் அவர்.
பத்து பொருத்தமும் பக்கா: அஜித்துக்கும் ஷாலினிக்கும் ஜாதகம் பார்த்தபோது பத்து பொருத்தமும் பக்காவா இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான். அப்படியொரு ஜோடி அவர்கள். அஜித் எங்களுக்கு மருமகன் இல்லை இன்னொரு மகன். வீட்டுக்கு யார் வந்தாலும் தண்ணீர் கொடுப்பதிலிருந்து சாப்பாடு பரிமாறுவதுவரை அவரேத்தான் செய்வார்.வேலையாட்களை குடும்ப உறுப்பினர் போல் நடத்துவார். அந்த குணம் மற்றவர்களையும் பற்றிக்கொள்ளும். அவ்வளவு பாசிட்டிவிட்டியோடு அன்பை பரிமாற தோன்றும்" என்றார்.


Click it and Unblock the Notifications











