Shalini Ajith: ஷாலினிக்கு திடீர் ஆபரேஷன்.. அய்யோ என்னாச்சு.. பதறிய ரசிகர்கள்!

சென்னை: அஜித்தின் மனைவி ஷாலினி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆபரேஷன் நடந்ததாக இணையத்தில் செய்தி வெளியானதை அடுத்து, அஜித்தின் ரசிகர்கள் பதறிப்போய் ஷாலினிக்கு என்ன ஆச்சு என கேட்டு ஹாஷ்டேகை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான அஜித் ஷாலினி அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போது, ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி இருவருக்கும் ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். காண்பவர் பார்த்து கண் வைக்கும் அளவிற்கு இவர்கள் இருவரின் அன்பு இருக்கும். அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ், படப்பிடிப்பு என பிஸியாக இருந்தாலும் தங்களது குடும்பத்திற்காக எப்போதும் நேரம் ஒதுக்கி வருகிறார். அண்மையில் தனது மகனின் பிறந்த நாளை துபாயில் கொண்டாடினார்.

Shalini Ajithkumar

ஓடிவந்த அஜித்: தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தை கையில் வைத்து இருக்கும் அஜித், விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றார். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று திடீரென சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித் வந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. விடாமுயற்சி படப்பிடிப்பு முடியாத நிலையில் அவர் தனிப்பட்ட வேலை காரணமாக சென்னை வந்ததாக கூறப்பட்டது.

டிரெண்டாகும் போட்டோ: இந்தநிலையில், ஷாலினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியதாக தகவல் பரவியது. இதையடுத்து இன்று ஷாலினிக்கு சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் ஷாலினியுடன் அஜித் கையை பிடித்தபடி இருக்கும் போட்டோ இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

ஷாலினிக்கு என்ன ஆச்சு: மேலும், ஷாலினிக்கு ஒரு மைனர் சர்ஜரி நடந்ததாகவும், பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது. ஷாலினி மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தி வெளியானதில் இருந்தே, அஜித்தின் ரசிகர்கள் பதற்றத்துடன் ஷாலினிக்கு என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். #ShaliniAjithKumar என்கிற ஹாஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அஜித் ஷாலினி போட்டோவை பார்த்த பிறகு தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், ஷாலினி விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X