பட்டுச்சேலையுடன் பொங்கல் கொண்டாடிய ஷாலினி பாண்டே.. ஷூட்டிங்ஸ்பாட் கொண்டாட்டம்!

By Vignesh Selvaraj

சென்னை : பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, நகரங்களில் வசித்து வரும் பலரும் சொந்த ஊர்களுக்குக் கிளம்பி இருக்கிறார்கள். தமிழர் திருநாளான பொங்கல் அன்றைக்காவது சொந்த ஊரில் மக்களோடு இருக்கப் பிரியப்படுபவர்கள் நகரங்களின் இரைச்சல் மறந்து ஊருக்குப் போவார்கள்.

தமிழகத்திற்கு வந்த வெளிமாநிலத்தவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில்லை என்றாலும், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பொங்கல் விழா நடந்து வருகிறது.

Shalini pandey celebrates pongal

அவ்வாறே, சினிமாவில் பணிபுரிபவர்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் பொங்கல் கொண்டாடி மகிழ்வார்கள். அதன்படி, ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, தலைவாசல் விஜய், தம்பி ராமையா ஆகியோர் நடிக்கும் '100% காதல்' படத்தை சந்திரமௌலி என்பவர் இயக்குகிறார்.

இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற '100% லவ்' படத்தின் ரீமேக் ஆகும். 'அர்ஜூன் ரெட்டி' நாயகி ஷாலினி பாண்டே இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.

'100% காதல்' படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் செட்டில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார்கள். மாடர்ன் பெண்ணாக கலக்கும் ஷாலினி பாண்டே பட்டுப்புடவை அணிந்து பொங்கல் வைத்து அசத்தியிருக்கிறார்.

'100% காதல்' படக்குழுவினர் பொங்கல் கொண்டாடும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X