ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல... இன்னொரு படத்திலும் கமிட்டான முத்த நடிகை!
Recommended Video

சென்னை :தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டே தற்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார்.
தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக '100% காதல்' படத்தில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படத்தால் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.
இந்நிலையில், தற்போது ஜீவா நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ஷாலினி பாண்டே.

ஷாலினி பாண்டே
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த ஷாலினி பாண்டே, 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்காக தெலுங்கு மொழியைக் கற்றுக்கொண்டு தானே சொந்தமாக டப்பிங் பேசி படக்குழுவையும், ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தினார். முதல் படமான 'அர்ஜுன் ரெட்டி'-யில் பல முத்தக்காட்சிகளில் நடித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

தமிழில் ஷாலினி பாண்டே
'அர்ஜுன் ரெட்டி' வெற்றிபெற்றதையடுத்து தமிழில் சந்திரமௌலி இயக்கும் '1௦௦% காதல்' என்கிற படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். லாவண்யா திரிபாதி சில காரணங்களால் விலகிக்கொள்ள அவருக்கு பதிலாகத்தான் ஷாலினி இந்தப் படத்தில் நடிக்க வந்தார்.

மகாநதி
துல்கர் சல்மான் நடிக்கும் சாவித்ரி வாழ்க்கையைப் பற்றிய படமான 'மகாநதி' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

தமிழ் கற்கும் ஷாலினி
தெலுங்கை கற்றுக்கொண்டு தெலுங்கில் டப்பிங் பேசியது போல, தமிழையும் கற்றுக்கொண்டு நானேதான் தமிழில் டப்பிங் பேசுவேன் எனக் கூறி மிரள வைத்துள்ளார் ஷாலினி பாண்டே. ஷாலினி பாண்டே தமிழ் கற்றுக்கொள்வதற்காக தற்போது அவருக்கு தமிழ் டியூஷன் வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

ஜீவா ஜோடியாக
இன்னும் ஷாலினி பாண்டே நடித்த அடுத்த படத்தின் வேலை முடிவடைவதற்குள் புதிய தமிழ்ப் படத்தில் கமிட் ஆகி இருக்கிறாராம். ஜீவா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











