ஷாலினி அஜித் படம் ஓடாதுன்னு சொல்லிட்டாங்க... எப்ப? எங்க தெரியுமா?
சென்னை : அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த அஜித் மற்றும் ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
அஜித் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள வலிமை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது
இந்த நிலையில் இயக்குனர் பேரரசு ஷாலினி அஜித் படம் ஓடாது என கரெக்டா சொல்லிட்டாங்க என அரிய தகவலை பகிர்ந்துள்ளார்.

காதல் திருமணத்தில் முடிந்தது
இப்பொழுது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர் அஜித்-ஷாலினி உடன் இணைந்து அமர்க்களம் திரைப்படத்தில் நடித்து இருப்பார். இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ஷாலினி ஆரம்பத்தில் நடிக்க மறுத்துள்ளார் பின் அஜித் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

உச்ச நடிகராக
திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் இருந்து முற்றிலும் விலகி குடும்பத்தை பார்த்துக் கொண்டுள்ளார். அஜித் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து இப்போது தமிழ் சினிமாவில் அனைவரும் கொண்டாடும் உச்ச நடிகராக உள்ளார் அஜித் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் வசூல் சாதனையை செய்து வருகிறது. அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் வலிமை கடந்த பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட து ஆனால் கொரோனா பரவலால் திரையரங்குகளை முழுவதுமாக திறப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இருந்தார்.

உடல் எடையை தாறுமாறாக குறைத்து
ஹாலிவுட் தரத்தில் முற்றிலும் ஆக்சன் கதைக்களத்தில் வெளியான வலிமையை திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் படத்தில் சண்டைக்காட்சிகள் மிகப் பிரமாதமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தையும் இயக்குனர் ஹெச் வினோத் இயக்க உள்ளார். இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை தாறுமாறாக குறைத்து உள்ளார்.

அஜித் படம் ஓடாது
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் பேரரசு தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த பொழுது ஷாலினியுடன் இணைந்து அஜித் நடித்த ஒரு படத்தை பார்க்க சென்றபோது, ஷாலினி படம் முடிந்து வெளியில் வரும்போது அஜித் படம் ஓடாதுன்னு சிரித்தபடி கிண்டலாக கூறினாராம். ஷாலினி சொன்னது போலவே அந்த படம் தோல்வியை சந்தித்ததாம்.


Click it and Unblock the Notifications











