Ajith - மறுபடியும் முதல்லயிருந்தா?.. விடாமுயற்சிக்கு என்னதான் ஆச்சு..மீண்டும் பைக்கில் ஏறிய அஜித்

சென்னை: Ajithkumar (அஜித்குமார்) விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அஜித் மீண்டும் பைக்கில் ஏறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்ப்ட்டுள்ளது. வி செண்ட்டிமெண்ட்படி இந்தப் படத்தின் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் படம் ஹிட்டாகும் என்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி மகிழ் திருமேனியும் மிகச்சிறந்த இயக்குநர் என்பதால் நிச்சயம் ஒரு சூப்பர் ஹிட் படத்தை எதிர்பார்க்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

Shalini shared a photo of Ajith riding a bike

உலக சுற்றுப்பயணம்: அஜித் தனது முதல்கட்ட வேர்ல்ட் டூரை அண்மையில் தொடங்கினார். நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் ரைட் செய்த அவர் சில மாதங்களுக்கு முன்பு பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். அதேபோல் அஜித் தனது அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இதற்கிடையே அஜித் சென்னை திரும்பிவிட்டதால் விடாமுயற்சி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

எப்போது ஷூட்டிங்?: இந்தச் சூழலில் விடாமுயற்சியில் இருந்த அத்தனை சிக்கல்களும் தீர்ந்துவிட்டதாகவும்; விரைவில் அதாவது ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே இதில் த்ரிஷா நடிப்பதாக இருந்ததாகவும்; ஆனால் அவர் இப்போது விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக தமன்னா நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சென்னை திரும்பிய அஜித்: இதற்கிடையே அஜித்குமர் சுவிட்சர்லாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார். சில நாட்களுக்கு முன்பு டிஷர்ட் அணிந்தபடி படு கேஷுவலாக சென்னை வந்திறங்கினார். அஜித் வந்துவிட்டார் எனவே விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கப்போகிறது என்ற உற்சாகத்தில் இருந்தனர் அஜித் ரசிகர்கள். மேலும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்தது.

Shalini shared a photo of Ajith riding a bike

மீண்டும் மீண்டுமா?: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அஜித் மீண்டும் வெளிநாடு கிளம்பிவிட்டார் என கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரது மனைவி ஷாலினி அஜித் பைக்கில் செல்லும்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால் இது புதிதாக எடுக்கப்பட்டதா இல்லை ஏற்கனவே எடுத்த செல்ஃபியா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

விடாமுயற்சி நிலை: சென்னை திரும்பியதால் விடாமுயற்சியை ஆரம்பித்துவிடுவார் என பலர் எதிர்பார்த்தனர். மகிழ் திருமேனியும் கதையை இறுதி செய்துவிட்டதாகவும், லொகேஷ்னகூட பார்த்துவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரம் கூறியது. ஆனால் இப்போது அஜித் மீண்டும் பைக்கில் ஏறியிருக்கிறார். ஒருவேளை இரண்டாம் கட்ட உலக சுற்றுப்பயணமாக இது இருந்துவிட்டால் விடாமுயற்சி நிலை என்னவாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். விஜய்யின் லியோ படம் முடிந்து அவரது அடுத்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. ஆனால் அஜித்தின் விடாமுயற்சியின் ஆரம்பக்கட்டமே இன்னும் நடக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X