»   »  மறைந்தும் ஒளிரும் ஷாலினி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஷாலினி என்ற மயூரி, எதற்காக தற்கொலை செய்து கொண்டார்என்ற சர்ச்சை இன்னும் தீராத நிலையில், சாவுக்குப் பின்னரும் தனது பெயர் பேசும்படியான காரியத்தை செய்துவிட்டுச் சென்றுள்ளார்.கும்பகோணம் கோபாலு என்ற படத்தில் பாண்டியராஜனுடன், ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில்அறிமுகமானார் ஷாலினி என்ற மயூரி. முதல் படம் சரியாக ஓடவில்லை. இதனால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. வேறு வழியில்லாமல், சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார். மலையாளக் கரையோரம் ஒதுங்கிய ஷாலினி, அங்கு மோகன்லால், மம்முட்டி உட்பட பல முன்னணிநடிகர்களுடன் நடித்தார். இடையில் டிவி தொடரிலும் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த ஸ்த்ரீ என்ற டிவி தொடர் ஷாலினிக்கு நல்லபெயரை பெற்றுத் தந்தது. இதனால் மேலும் பல மலையாள டிவி தொடரில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. அத்தோடு கடந்த மக்களவைத் தேர்தலின் போது விஜய் டிவியில், மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியையும்தொகுத்து வழங்கி தனது மறுபக்கத்தைக் காட்டி பிரமிக்க வைத்தார்.மற்ற நடிகைகளைப் போல அவருடன் சுற்றினார், இவருடன் போனார் என்றெல்லாம் செய்திகளில் அடிபடாமல்நல்ல பிள்ளையாக இருந்து வந்தவர் ஷாலினி. இவரது கூட்டத்தில் நண்பர்கள் யாராவது சோகமாக இருந்தால்அவர்களிடம் வாழ்க்கை வாழ்வதற்கே, இருக்கும் வரை ஜாலியாக இருப்போம் என்று கூறுவாராம்.நண்பர்களுக்கு அறிவுரை சொன்ன ஷாலினியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை.வழக்கம் போல சினிமா நடிகைகள் தற்கொலை செய்து கொண்டால் அது காதல் தோல்வியாகத் தான் இருக்கும்என்று கூறுவார்கள்.இதே போலத் தான் ஷாலினியின் விஷயத்திலும் கூறப்படுகிறது.ஆனால் இறப்பதற்கு முன் அவர் ஒரு நல்ல விஷயத்தை செய்து விட்டுச் சென்றுள்ளார். தனது கண்களைத்தானமாக கொடுத்துள்ளார் ஷாலினி. அவரது மரணத்திற்குப் பிறகு சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையிலிருந்து வந்த டாக்டர்கள் குழுஷாலினியின் கண்களை எடுத்துச் சென்றுள்ளனர்.வேண்டாம் என்று விட்டு விட்டுப் போன இந்த உலகை யார் மூலம் மீண்டும் பார்க்கப் போகிறாரோ ஷாலினி!

மறைந்தும் ஒளிரும் ஷாலினி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஷாலினி என்ற மயூரி, எதற்காக தற்கொலை செய்து கொண்டார்என்ற சர்ச்சை இன்னும் தீராத நிலையில், சாவுக்குப் பின்னரும் தனது பெயர் பேசும்படியான காரியத்தை செய்துவிட்டுச் சென்றுள்ளார்.கும்பகோணம் கோபாலு என்ற படத்தில் பாண்டியராஜனுடன், ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில்அறிமுகமானார் ஷாலினி என்ற மயூரி. முதல் படம் சரியாக ஓடவில்லை. இதனால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. வேறு வழியில்லாமல், சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார். மலையாளக் கரையோரம் ஒதுங்கிய ஷாலினி, அங்கு மோகன்லால், மம்முட்டி உட்பட பல முன்னணிநடிகர்களுடன் நடித்தார். இடையில் டிவி தொடரிலும் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த ஸ்த்ரீ என்ற டிவி தொடர் ஷாலினிக்கு நல்லபெயரை பெற்றுத் தந்தது. இதனால் மேலும் பல மலையாள டிவி தொடரில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. அத்தோடு கடந்த மக்களவைத் தேர்தலின் போது விஜய் டிவியில், மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியையும்தொகுத்து வழங்கி தனது மறுபக்கத்தைக் காட்டி பிரமிக்க வைத்தார்.மற்ற நடிகைகளைப் போல அவருடன் சுற்றினார், இவருடன் போனார் என்றெல்லாம் செய்திகளில் அடிபடாமல்நல்ல பிள்ளையாக இருந்து வந்தவர் ஷாலினி. இவரது கூட்டத்தில் நண்பர்கள் யாராவது சோகமாக இருந்தால்அவர்களிடம் வாழ்க்கை வாழ்வதற்கே, இருக்கும் வரை ஜாலியாக இருப்போம் என்று கூறுவாராம்.நண்பர்களுக்கு அறிவுரை சொன்ன ஷாலினியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை.வழக்கம் போல சினிமா நடிகைகள் தற்கொலை செய்து கொண்டால் அது காதல் தோல்வியாகத் தான் இருக்கும்என்று கூறுவார்கள்.இதே போலத் தான் ஷாலினியின் விஷயத்திலும் கூறப்படுகிறது.ஆனால் இறப்பதற்கு முன் அவர் ஒரு நல்ல விஷயத்தை செய்து விட்டுச் சென்றுள்ளார். தனது கண்களைத்தானமாக கொடுத்துள்ளார் ஷாலினி. அவரது மரணத்திற்குப் பிறகு சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையிலிருந்து வந்த டாக்டர்கள் குழுஷாலினியின் கண்களை எடுத்துச் சென்றுள்ளனர்.வேண்டாம் என்று விட்டு விட்டுப் போன இந்த உலகை யார் மூலம் மீண்டும் பார்க்கப் போகிறாரோ ஷாலினி!

Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஷாலினி என்ற மயூரி, எதற்காக தற்கொலை செய்து கொண்டார்என்ற சர்ச்சை இன்னும் தீராத நிலையில், சாவுக்குப் பின்னரும் தனது பெயர் பேசும்படியான காரியத்தை செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

கும்பகோணம் கோபாலு என்ற படத்தில் பாண்டியராஜனுடன், ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில்அறிமுகமானார் ஷாலினி என்ற மயூரி. முதல் படம் சரியாக ஓடவில்லை.

இதனால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. வேறு வழியில்லாமல், சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார். மலையாளக் கரையோரம் ஒதுங்கிய ஷாலினி, அங்கு மோகன்லால், மம்முட்டி உட்பட பல முன்னணிநடிகர்களுடன் நடித்தார்.

இடையில் டிவி தொடரிலும் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த ஸ்த்ரீ என்ற டிவி தொடர் ஷாலினிக்கு நல்லபெயரை பெற்றுத் தந்தது. இதனால் மேலும் பல மலையாள டிவி தொடரில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது.

அத்தோடு கடந்த மக்களவைத் தேர்தலின் போது விஜய் டிவியில், மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியையும்தொகுத்து வழங்கி தனது மறுபக்கத்தைக் காட்டி பிரமிக்க வைத்தார்.

மற்ற நடிகைகளைப் போல அவருடன் சுற்றினார், இவருடன் போனார் என்றெல்லாம் செய்திகளில் அடிபடாமல்நல்ல பிள்ளையாக இருந்து வந்தவர் ஷாலினி. இவரது கூட்டத்தில் நண்பர்கள் யாராவது சோகமாக இருந்தால்அவர்களிடம் வாழ்க்கை வாழ்வதற்கே, இருக்கும் வரை ஜாலியாக இருப்போம் என்று கூறுவாராம்.

நண்பர்களுக்கு அறிவுரை சொன்ன ஷாலினியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை.வழக்கம் போல சினிமா நடிகைகள் தற்கொலை செய்து கொண்டால் அது காதல் தோல்வியாகத் தான் இருக்கும்என்று கூறுவார்கள்.

இதே போலத் தான் ஷாலினியின் விஷயத்திலும் கூறப்படுகிறது.

ஆனால் இறப்பதற்கு முன் அவர் ஒரு நல்ல விஷயத்தை செய்து விட்டுச் சென்றுள்ளார். தனது கண்களைத்தானமாக கொடுத்துள்ளார் ஷாலினி.

அவரது மரணத்திற்குப் பிறகு சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையிலிருந்து வந்த டாக்டர்கள் குழுஷாலினியின் கண்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

வேண்டாம் என்று விட்டு விட்டுப் போன இந்த உலகை யார் மூலம் மீண்டும் பார்க்கப் போகிறாரோ ஷாலினி!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil