ரியாலிட்டி ஷோக்களின் பிரம்மா... கமல் சார் ஆரம்பிக்கலாமா...மிரள வைக்கும் ப்ரோமோ

சென்னை : தமிழ் டிவி சேனல்களில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்து, அதிக ரசிகர்களை கொண்ட ஷோ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது பிக்பாஸ். விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து, வெற்றிகரமாக ஐந்தாவது சீசனை துவக்க உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட விழாவாக துவங்கப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை இடைவிடாத ஐந்து மணி நேர நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. முந்தைய நான்கு சீசன்களை போல இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளார்.

சுவாரஸ்ய ப்ரோமோக்கள்

சுவாரஸ்ய ப்ரோமோக்கள்

இதற்காக விதவிதமாக சுவாரஸ்யமான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை விஜய் டிவி மிக சரியாக கணிக்கிறது என்பதற்கு இதுவரை வெளியிடப்பட்ட ப்ரோமோக்களே சாட்சி. நிகழ்ச்சி துவங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால், அதற்கு ஏற்றாற் போல் மற்றொரு அழகான ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

கமல் சார் ஆரம்பிக்கலாமா

கமல் சார் ஆரம்பிக்கலாமா

அந்த ப்ரோமோவில், உலக தமிழ் ரசிகர் நெஞ்சங்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு. ஒட்டுமொத்த ரியாலிட்டி ஷோக்களின் ஒரே பிரம்மா. என்ன பிக்பாஸ் ரெடியா என குரல் ஒலிக்கிறது. அதற்கு பிக்பாஸ் குரல், நான் சிறப்பா தயாராகுறேன். பஞ்ச தந்திரங்கள் சோதிக்க, பிரம்மாண்டமான கிராண்ட் ஓப்பனிங்கோட...என்ன கமல் சார் ஆரம்பிக்கலாம் என்கிறது. இதற்கு பதிலாக, தனது அக்மார்க் சிரிப்புடன், ஆரம்பிச்சுட்டோம் என்கிறார் கமல்.

இவ்வளவு இருக்கா

இவ்வளவு இருக்கா

இந்த ப்ரோமோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ரியாலிட்டி ஷோக்களின் பிரம்மா என்ற உச்சகட்ட பாராட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்துள்ளது என்பதன் பிரம்மாண்டத்தை காட்டுகிறது. அதே போல் பஞ்சதந்திரங்கள் சோதிக்க என பிக்பாஸ் குரல் சொல்வது, கொரோனா, லாக்டவுன் போன்ற பிரச்சனைகளை கடந்து மீண்டும் ஷோ ஆரம்பிக்கப்பட உள்ளதை காட்டுகிறது.

கமல் பாடுறாரா

கமல் பாடுறாரா

அதோடு துவக்க விழாவில் நேயர் விருப்பமாக கமல், குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடலையும் பாட உள்ளார் என்பது இந்த ப்ரோமோவின் மூலம் தெரிகிறது. கடந்த சீசனில் இல்லாமல் இந்த சீசனில் மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது கரகோஷங்களின் மூலம் தெரிகிறது.

கவினின் நடனம் உண்டா

கவினின் நடனம் உண்டா

அதுமட்டுமல்ல மற்றொரு தகவலாக பிக்பாஸ் 3 போட்டியாளர் கவின், இன்றைய துவக்க நிகழ்ச்சியில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட உள்ளதாக வேறு கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்ட கவின், டைரக்டர் நெல்சனல் திலீப்குமாரிடம் டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களில் ஆசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார். அதோடு சமீபத்தில் ரிலீசான லிஃப்ட் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X