அரை டவுசர் அணிந்து கொண்டு ஆண் நண்பருடன் அப்படியொரு ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு ஆண் நண்பர் ஒருவருடன் நடனமாடும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்திலும் இவர் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண மாட்டேன்
சினிமாவில் ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை காரணமாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை தான் தவறவிட்டதாகவும், அப்படி அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. எனக்கான கதாபாத்திரங்கள் வரும் போது நான் நடிப்பேன் என உறுதியாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அசத்தி வருகிறார்.

கிளாமர் செட் ஆகுது
படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து நடத்தும் போட்டோஷூட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. அடிக்கடி இவர் வெளியிடும் நடன வீடியோக்களும், இன்ஸ்டாகிராம் ரீல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. தனக்கு கிளாமர் செட் ஆவதால் தனக்கு பிடித்த மாடலிங்கை செய்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

நண்பருடன் டான்ஸ்
இந்நிலையில், தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் நடனமாடும் வீடியோவை நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆங்கில பாடல் ஒன்றுக்கு இருவரும் வீட்டின் வெளியே செம ரொமான்டிக்காக நடனமாடுகின்றனர். "Dance is Everything" என கேப்ஷன் போட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

அரை டவுசருடன்
கருப்பு நிற டாப்ஸ் மற்றும் தொடையழகு தெரியும் படி சின்னதாக ஒரு ஷாட்ஸ் அணிந்து கொண்டு செம ஹாட்டாக நடனமாடுகிறார் ஷாலு ஷம்மு. அவரது ஆண் நண்பரான பிரியன் என்பவர் அரை டவுசர் அணிந்து கொண்டு ஷாலு ஷம்முவை சும்மா வளைத்து நெளித்து நடனமாடும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
கமெண்ட் ஆப்ஷன் இல்லை
கண்டிப்பாக இந்த நடனத்தை பார்த்தால் நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் அடிப்பார்கள் என நினைத்த ஷாலு ஷம்மு உஷாராக கமெண்ட் ஆப்ஷனை இந்த வீடியோவுக்கு ஆஃப் செய்து வைத்துவிட்டார். ஆனாலும், சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை ஷேர் செய்து ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











