Shalu Shammu - வீட்டில் யாருமே இல்லை.. ஜூஸ் கொடுத்து இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார்.. ஷாலு ஷம்மு ஓபன் டாக்
சென்னை: Shalu Shammu (ஷாலு ஷம்மு) இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை ஷாலு ஷம்மு தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களி திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை பெண்களுக்கு தீர்ந்தபாடில்லை.

ஹீரோயின்களின் ஓபன் டாக்ஸ்: அட்ஜெட்ஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.
வாரிசு நடிகையிடமும்: அதேபோல் சினிமாவில் வாரிசு நடிகையாக அறியப்படும் வரலட்சுமியிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் நடந்திருக்கிறது. தந்தை சினிமாவில் இருந்தும்கூட வரலட்சுமியிடம் இப்படி அப்ரோச் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜெட்ஸ்ட்மெண்ட் அப்ரோச் குறித்து ஓபனாக பேசிவருகிறார்.
ஷாலு ஷம்மு: அந்தவகையில் நடிகை ஷாலு ஷம்மு ஒரு பேட்டியில் உண்மை ஒன்றை போட்டு உடைத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "படம் ஒன்றி நடிப்பதற்காக என்னை ஒரு இயக்குநர் அணுகினார். உங்களின் கதாபாத்திரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு முகவரியை கொடுத்தார். அந்த முகவரிக்கு நானும் நம்பி சென்றேன்.

வீட்டில்: அந்த வீட்டில் அவருடைய குடும்ப புகைப்படங்கள் இருந்தன. அப்போதுதான் தெரிந்தது நாம் வந்திருப்பது அவருடைய சொந்த வீடு என்று. வீட்டில் வேறு யாரும் இல்லை. அந்த சமயத்தில் எனக்கு ஜூஸ் கொடுத்தார். தொடர்ந்து பேச்சை ஆரம்பித்தார். அப்போது படத்தை பற்றியோ இல்லை என்னுடைய கதாபாத்திரம் பற்றியோ பேசாமல் வேறு விஷயங்களை அதிகம் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் கொஞ்ச நேரம் கழித்து என்னை படுக்கைக்கு அழைத்தார். அதிர்ச்சியடைந்த நான் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிட்டேன்" என்றார்.
யார் ஷாலு ஷம்மு: ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்து பிரபலமடைந்தவர் தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பிற படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் வாய்ப்புகள் அவருக்கு குறைந்ததால் சமூக வலைதளங்களில் தான் நடனம் ஆடும் வீடியோ மற்றும் தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி ஆக்டிவ்வாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











