துரத்தி அடிக்கப்பட்ட டிக் டாக் இலக்கியாவிற்கு பதிலாக.. இந்த நடிகையை கன்ஃபார்ம் பண்ண பிக் பாஸ் டீம்!
சென்னை: விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில், டிக் டாக் பிரபலங்களுக்கும், யூடியூப் பிரபலங்களுக்கும் வாய்ப்புகளை வழங்க பிக் பாஸ் குழுவினர் முடிவு செய்து இருந்தனர்.
அதன் காரணமாக, டிக் டாக்கில் அரை குறை ஆடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் டிக் டாக் பிரபலம் இலக்கியாவை பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர முடிவும் செய்திருந்ததாக தகவல்கள் வெளியானது.

டிக் டாக் இலக்கியா
ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இலக்கியா பண்ண பில்டப் காரணமாக அவர் நிகழ்ச்சியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் அப்டேட் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை ரொம்பவே அப்செட் பண்ணியது. இந்நிலையில், டிக் டாக் இலக்கியாவிற்கு பதிலாக யாரை களமிறக்கப் போகிறது பிக் பாஸ் குழு என்ற தகவல் கசிந்துள்ளது.

எகிறிய எதிர்பார்ப்பு
இந்த லாக்டவுனில் புதிய நிகழ்ச்சிகளை பார்க்காமல், பழைய சீரியல்களை பார்த்து ரொம்பவே போரடித்துப் போயுள்ள இளைஞர்களை ஒடிடி பக்கமும் செல்ல விடாமல், சமீபத்தில் ரிலீசாகும் மொக்கைப் படங்கள் தடுத்து வருகின்றன. இதனால், பிக் பாஸ் தமிழ் 4 சீசனுக்கு ரசிகர்கள் ஏகபோகமாக வெயிட் செய்து வருகின்றனர்.

பேரம் பேசினால் காலி
பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு வெடித்த சர்ச்சைகளை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியே அடுத்து நடக்காது என்றும், எந்தவொரு பிரபலங்களும் அதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டனர் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. அதன் காரணமாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஒரு கோடி வரை பேரம் பேசினார். ஆனால், பிக் பாஸ் டீசர் வெளியான பிறகு அதற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பை பார்த்து பல பிரபலங்களும் முன் வரத் தொடங்கி உள்ளனர். அதனால், தான் ஷில்பா மஞ்சுநாத்துக்கும் பெப்பே காட்டி விட்டது பிக் பாஸ் என பேசிக் கொள்கின்றனர்.

அவருக்கு பதில் இவரா
டிக் டாக் இலக்கியா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டு பின்னர் நீக்கப்பட்டு வரும் நிலையில், இப்போ, கவர்ச்சி புயல் ஷாலு ஷம்மு பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக வரப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போன சீசனிலே
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட சிவகார்த்திகேயன் படங்களில் காமெடி நடிகையாக நடித்து வந்த ஷாலு ஷம்மு, சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோஷூட் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும், போன பிக் பாஸ் 3 சீசனிலே இவர் போட்டியாளராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

இளம் ஹீரோயின்
அதே போல இளம் ஹீரோயின் ஒருவரும் தானாகவே முன் வந்து பிக் பாஸ் இல்லத்திற்குள் வர சம்மதித்து உள்ள நிலையில் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கெட்டவுட் செய்யப்பட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எதுவாக இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போகும் நாளில் முழுப் பட்டியல் தெரிந்து விடும். வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











