எந்த பாதிப்பும் இல்லை.. கொரோனா 2வது டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கிட்டேன்.. ஷாலு ஷம்மு ட்வீட்!
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டதாக தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
பொதுமக்களை போல கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாமா வேண்டாமா? என்கிற பயத்துடன் இருந்து வந்த திரை பிரபலங்களும் தற்போது தொடர்ந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

ரஜினி முதல் டிடி வரை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வரை ஏகப்பட்ட பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். மேலும், மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அதன் மீது இருக்கும் பயத்தை போக்கி வருகின்றனர்.

முதல் டோஸ்
கடந்த மார்ச் மாதமே காமெடி நடிகை ஷாலு ஷம்மு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். தற்போது அதன் புகைப்படங்களை ஷேர் செய்து தனது ரசிகர்களையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி வருகிறார்.

இரண்டாவது டோஸ்
கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி முதல் டோஸை செலுத்திக் கொண்ட நடிகை ஷாலு ஷம்மு இரண்டாவது டோஸை இந்த மாதம் 12ம் தேதி செலுத்திக் கொண்டார். தற்போது இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

ஒண்ணும் ஆகல
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்கிற பயத்தால் மக்கள் பலரும் அதனை செலுத்திக் கொள்ள இன்னமும் யோசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்ட ஷாலு ஷம்மு கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கு பிறகு அதன் புகைப்படங்களை வெளியிட்டு, தனக்கு எந்தவொரு பாதிப்பும் ஆகவில்லை என்றும் தைரியமாக நீங்களும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
Recommended Video

நான் பாதுகாப்பாகிட்டேன்
கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டதால் கொரோனா பரவல் பயமின்றி நான் பாதுகாப்பாகிட்டேன். மேலும், என் குடும்பத்தினருக்கும், என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் என்னால் ஏற்படாது, நீங்களும் உங்களை பாதுகாப்பானவராக மாற்றிக் கொள்ளுங்கள் என விழிப்புணர்வு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











