ஷாக்கிங்.. கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க.. மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த ஷாலு ஷம்மு

சென்னை: மீரா மிதுன் தன்னை அவதூறாக பேசி வருவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் நடிகை ஷாலு ஷம்மு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

Recommended Video

Shalu Shammu வை மிரட்டும் Meera Mithun | Filmibeat Tamil

ஒட்டுமொத்த கோலிவுட்டையே பகைத்துக் கொண்டு வருகிறார் நடிகை மீரா மிதுன்.

மூத்த நடிகர்கள், இளையவர்கள் என்று யாரையும் வைத்து பார்க்காமல், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

ஆபாச பேச்சு

ஆபாச பேச்சு

நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா மற்றும் தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவை மிகவும் தகாத வார்த்தையில் ஆபாசமாக பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்ட நிலையில், ஏகப்பட்ட பிரபலங்களும், விஜய், சூர்யா ரசிகர்களும் மீரா மிதுனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஷாலு ஷம்மு

ஷாலு ஷம்மு

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் என பல படங்களில் காமெடி நடிகையாக நடித்து வந்த ஷாலு ஷம்முவும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு மீரா மிதுனுக்கு டஃப் கொடுத்து வந்தார். விஜய், சூர்யா குறித்து மீரா மிதுன் கொச்சையாக பேசிய நிலையில், அவரை வெளுத்து வாங்கும் விதமாக ஷாலு ஷம்மு தொடர்ந்து பேசி வருகிறார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இந்நிலையில், நடிகை ஷாலு ஷம்முவையும் மீரா மிதுன் விட்டு வைக்கவில்லை. அவர் பேசிய வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, அவரை பற்றியும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வந்தார். மேலும், அவருக்கு தற்போது கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவல் ஆணையரிடம் புகார்

காவல் ஆணையரிடம் புகார்

இந்நிலையில், தற்போது சென்னை காவல் ஆணையரிடம், மீரா மிதுன் தன்னை அவதூறாக பேசியதாகவும், தன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். ஏற்கனவே புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் மீரா மிதுன் மீது புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை

அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை

ஆலியா பட் நடித்த 'சடக் 2' படத்திற்கு கிடைத்தது போலவே நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் படங்களுக்கும் ரசிகர்கள் டிஸ்லைக்ஸ் போடுவார்கள் என்று மீரா மிதுன் அண்மையில் கூறியிருந்ததற்கு பதிலடியாக விஜய் ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை எனக் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X