போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது.. அப்படியொரு போஸ் கொடுத்த ஷாலு.. ஓவரா ஓட்டும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகையும் மாடல் அழகியுமான ஷாலு ஷம்மு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஒன்று நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்த லாக் டவுன் நேரத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகைகளும், வீட்டில் வேலை செய்யும் புகைப்படங்களையும், வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
மேக்கப் போடாமல் ரியல் பியூட்டியை பல பிரபலங்கள் காட்டி வரும் நிலையில், ஃபுல் மேக்கப் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அப்படியொரு போஸ்
பிங்க் நிறத்தில் மிளிரும் உடையில், ஏகப்பட்ட மேக்கப்களுடன் நடிகை ஷாலு ஷம்மு எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை, அவரது ரசிகர்களுக்காக தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். கைகளில் டாட்டூக்கள், கழுத்தில் நெக்லெஸ், கண்களில் அதீத மை போட்டு, காந்த கண்ணழகியாக அப்படியொரு போஸ் கொடுத்துள்ளார் ஷாலு.

கலாய்க்கும் கும்பல்
பொதுவாக மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், ஷாலு ஷம்மு போன்ற பிரபலங்கள் பகிரும் போட்டோக்கள் வைரலானாலும், அதிகபடியான லைக்குகள் குவிந்தாலும், அவர்களை ஓட்டவதையே என்டர்டெயின்மென்ட்டாக வைத்திருக்கிறது ஒரு கும்பல். அதிலும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியானால், உடனடியாக ஆபாச கமெண்ட்டுகளும் எல்லை மீறுகின்றன.

போன் ஒயர் பிஞ்சி
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகையாக நடித்து வந்த ஷாலு ஷம்மு, சமீப காலமாக சோஷியல் மீடியாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வைரலாகி வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் போனுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது என கமெண்ட் செய்துள்ளனர்.
ஓவர் மேக்கப்
மற்றொரு நெட்டிசன், அது என்ன பொண்ணுங்கள்ல சில பேர் மேக்கப் எனும் சுவருக்கு பின்னால் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கீங்க, மேக்கப் போடாத சொந்தமான மூஞ்சில போட்டோஸ் போட்டா என்னவாம் என ஷாலு ஷம்முவின் ஓவர் மேக்கப் போட்டோவை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும், ஷாலுவின் ரசிகர்கள் செம செக்ஸியா இருக்கீங்க என வர்ணித்தும் வருகின்றனர்.
இந்தியாவின் இளவரசி
மற்றொரு புகைப்படத்தில் நீல நிற சேலை கட்டி, பழைய நடிகைகள் போல லூஸ் ஜாக்கெட் அணிந்துக் கொண்டு வித்தியாசமான போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்முவின் புகைப்படத்தை பதிவிட்டு, தீவிர ரசிகர் ஒருவர், இந்தியாவின் இளவரசியே என ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி இருப்பதும், பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

நெகட்டிவ் பப்ளிசிட்டி
இவர்களும் சளைக்காமல், எத்தனை முறை கலாய்த்தாலும், மீண்டும் மீண்டும் கலாய்க்கும் படியான படு கவர்ச்சி புகைப்படங்களையே அதிகளவில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி தங்களை பலர் ட்ரோல் செய்தாலும், பரவாயில்லை அது தங்களுக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி தான் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும் இவர்கள் பல போட்டோஷூட் நடத்தி அடிக்கடி தங்களை அப்டேட் செய்து வருகின்றனர்.

அடுத்த சீசனில்
சமூக வலைதளங்களில் இப்படி ஓவராக கிளாமர் காட்டி வருபவர்களையும், சர்ச்சைகளை உருவாக்கி வருபவர்களையும் பிக்பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்கள் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷாலு ஷம்மு, அடுத்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்க பல வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











