கோயிலில் குத்தாட்டம் போட்ட ஷாலு ஷம்மு.. அதிதி ஷங்கருக்கே டஃப் கொடுப்பாங்க போல!

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயிலில் ஸ்பெஷல் போட்டோஷூட்டை நடத்திய கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு அங்கேயே போட்ட குத்தாட்ட வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட நடிகைகள் ஓணம் ஸ்பெஷல் உடையை அணிந்து கொண்டு போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

நடிகை ஷாலு ஷம்முவும் இந்த முறை கோயிலில் செம க்யூட்டாக உடையணிந்து அழகாக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி உள்ளார்.

ஓணம் ஸ்பெஷல்

ஓணம் ஸ்பெஷல்

ஓணம் பண்டிகை அதிகளவு கேரளாவில் கொண்டாடப்பட்டாலும் கோலிவுட் நடிகைகள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களை கவர் செய்ய ஓணம் காஸ்ட்யூமில் மலையாள நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகின்றனர். நடிகை ஷாலு ஷம்மு கோயிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

கேரளத்து பெண் குட்டி

கேரளத்து பெண் குட்டி

கவர்ச்சி குயினாக சோஷியல் மீடியாவில் வலம் வரும் நடிகை ஷாலு ஷம்மு அப்படியே கேரளத்து பெண் குட்டியை போல அழகாக சந்தன நிற பாவாடை சட்டை அணிந்து கோயிலில் பக்காவாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

கோயிலில் குத்தாட்டம்

கோயிலில் குத்தாட்டம்

போட்டோஷூட் மட்டும் போட்டால் போதுமா, கூடவே ரசிகர்களுக்காக ஒரு டான்ஸ் ரீல்ஸையும் போடலாமே என நினைத்த அவர் விருமன் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு செம கூலாக நடனம் ஆடி போட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது. கோயிலில் செம குத்தாட்டம் போட்டு இருக்கீங்களே ஷாலு ஷம்மு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதிதி ஷங்கருக்கு போட்டி

அதிதி ஷங்கருக்கு போட்டி

கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த விருமன் படத்தில் இடம்பெற்ற 'மதுர வீரன்' பாடலுக்குத்தான் செம மாஸாக ஆடியுள்ளார் ஷாலு ஷம்மு. அவரது அந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இவர் அதிதி ஷங்கருக்கே டஃப் கொடுப்பார் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர். அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X