அப்போ அப்படி.. இப்போ இப்படி.. ஸ்ட்ராப்லெஸ் உடையில் கலங்கடிக்கும் ஷாலு ஷம்மு.. டாப் டக்கர்!
சென்னை: மேலாடை அணியாமல் பூக்களை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்து டிரெண்ட் செய்த ஷாலு ஷம்மு தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடையில் கூடுதல் கவர்ச்சி காட்டி மிரள விட்டுள்ளார்.
காமெடி நடிகையாக சில படங்களில் நடித்துள்ள ஷாலு ஷம்மு சமூக வலைதளங்களில் தனது கிக்கேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.
காதலர் தினத்தை முன்னிட்டு இவர் நடத்திய அரை நிர்வாண போட்டோஷூட் வேற லெவலில் டிரெண்டானது.

காமெடி நடிகை
நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார் ஷாலு ஷம்மு. மேலும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார்.

மாடல் அழகி
கோலிவுட்டில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த ஷாலு ஷம்முவுக்கு மாடலிங்கில் அதிகளவு ஆர்வமும் ஆசையும் இருக்கிறது. ஒரு புறம் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டே இப்படி மாடலிங் மற்றும் விளம்பரம் செய்து பிரபலமாகி வருகிறார். இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாமே சோஷியல் மீடியாவில் வைரலாகின்றன.

அரை நிர்வாணமாக
காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ஷாலு ஷம்மு கடற்கரையில் நடத்திய அரை நிர்வாண போட்டோஷூட் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் அப்படியே ஈர்த்தது. தனது முன்னழகை பூக்களை கொண்டு மறைத்தபடி போஸ் கொடுத்து சர்வதேச மாடல் அழகிகளுக்கே சவால் விடுத்தார்.

வேற லெவல் வைரல்
மரத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டும், கடற்கரையில் அதே பூக்களை மட்டுமே பிடித்துக் கொண்டு செம போல்டாக நடந்தபடி ஏகப்பட்ட போஸ்களை கொடுத்து காதலர் தினத்தன்று தனது ரசிகர்களுக்கு வேற லெவல் கவர்ச்சி விருந்தை வைத்தார். ஒட்டுமொத்த மீடியாக்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி கெத்துக் காட்டினார்.

ஸ்ட்ராப்லெஸ் உடையில்
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு கிளாமர் போட்டோஷூட்டை நடத்தி சோஷியல் மீடியா கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு. நீல நிற கிளிட்டர் ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து வைரலாக்கி வருகிறார்.

டூ ஹாட்
கிளாமர் உடையில் செம செக்ஸியாக போஸ் கொடுத்து ஏகப்பட்ட ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. இவரது இந்த லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கல் டூ ஹாட், ரொம்ப அழகா இருக்கீங்க என கமெண்ட் செக்ஷனில் வர்ணித்து தள்ளி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











