மாராப்பு மேல ஜாக்கெட்டா? இது புதுசால்ல இருக்கு.. வைரலாகும் நடிகையின் வேற லெவல் போட்டோ!
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு வித்தியாசமான உடையில் ஷேர் செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாகவே நடித்து வருகிறார்.
இதுவரை எந்த படத்திலும் லீடிங் ரோலில் நடிக்கவில்லை ஷாலு ஷம்மு. ஆனால் சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

சோஷியல் மீடியாவில் பிரபலம்
தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். வித்தியாசமான உடைகளிலும் அரைகுறை உடையிலும் அவர் நடத்தும் போட்டோ ஷுட்டுக்கள் சமூக வலைதளத்தில் பெரும் பிரபலம்.

லீடிங் ரோல்
அண்மையில் இவர் நடத்திய நிர்வாண போட்டோ ஷுட் சமூக வலைதளங்களில் செம வைரலானது. அவர் காட்டிய கவர்ச்சிக்கு பலனாக இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் லீடிங் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

நெட்டிசன்கள் வசவு
அவரது போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினாலும் சில நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் சேலையில் வித்தியாசமான முறையில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார்.

சேலை மீது ஜாக்கெட்
வழக்கமாக சேலை கட்டும் பெண்கள் ஜாக்கெட் போட்டு அதன் மீது மாராப்பை போடுவார்கள். ஆனால் ஷாலு ஷம்மு மாராப்பை போட்டு அதன் மீது ஜாக்கெட்டை போட்டிருக்கிறார். அந்த விநோத டிரெஸிங்கில் ஏராளமான போட்டோக்களையும் எடுத்துள்ளார் ஷாலு ஷம்மு.

உள்ளே போடுறத..
ஷாலு ஷம்மு தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்ன இது உள்ள போட வேண்டியத வெளியே போட்டுட்டு சுத்துறீங்க என கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

அவங்கள மாதிரி ..
இன்னும் சில நெட்டிசன்கள், சூப்பர் ஹீரோஸ் பேண்ட் மேல ஜட்டி போடுற மாதிரி நீங்க என்ன சேலை மேல ஜாக்கெட் போட்ருக்கீங்க என கிண்டலடித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் ஏன் இப்படி என கேட்டுள்ளனர்.

வளையல் மிஸ்ஸிங்
இன்னும் சில நெட்டிசன்கள், வித்தியாசமான போட்டோ ஷுட், நல்ல தீம்.. நீங்கள் செம க்யூட்டாக இருக்கிறீர்கள் என பாராட்டியுள்ளனர். ஷாலு ஷம்முவின் கையில் வளையல் இல்லாததை கண்ட சில நெட்டிசன்கள், வளையல் போட்டிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்றும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











