செல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்

By Siva

Recommended Video

MeToo காம்பைனில் சிக்கி சின்னாபின்னமான பாலிவுட் பிரபலங்கள் பட்டியல்- வீடியோ

மும்பை: பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தன்னிடம் ஆபாச பட வீடியோவை காண்பித்தாக பெண் துணை இயக்குனர் புகார் தெரிவித்துள்ளார்.

ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தவர் நமீதா பிரகாஷ். அவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான ஷாம் கவ்ஷல் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நமீதா சமூக வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது,

மது

மது

கடந்த 2006ம் ஆண்டு அவுட்டோர் ஷூட்டிங்கின்போது விருது வாங்கிய பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஷாம் கவ்ஷல் படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் அவரின் அறைக்கு சென்று வோட்கா குடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் கூறியது எனக்கு சரியாகப்படவில்லை. இதையடுத்து நான் மது அருந்தவே மாட்டேன் என்று அவரிடம் பொய் சொன்னேன்.

செல்போன்

செல்போன்

நான் அவரின் அறைக்கு வந்து கண்டிப்பாக மது அருந்த வேண்டும் என்று ஷாம் வலியுறுத்தினார். நான் தொடர்ந்து மறுக்கவே அவர் தனது செல்போனை எடுத்து அதை என்னிடம் காட்டினார். அதில் ஆபாச வீடியோ ஓடிக் கொண்டிருந்தது. அதை பாங்காக்கில் வாங்கியதாக அவர் தெரிவித்தார். யாரோ எனக்கு பேஜ் அனுப்பியதாக நடித்து அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அதிர்ச்சி

ஷாம் கவ்ஷலின் செயல் பற்றி தயாரிப்பாளரிடம் உடனே தெரிவித்தேன். அதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த ஷெட்யூல் முடியும் வரை நான் ஸ்டண்ட் அணியுடன் தனியாக இல்லாதபடி அவர் பார்த்துக் கொண்டார். அந்த சம்பவம் நடந்தபோது நான் ஷாம் கவ்ஷலுடன் தனியாக இருந்தேன். படக்குழுவின் வருகைக்காக காத்திருந்தபோது அவரின் பாய்ஸ் மாஸ்டர்ஜி முன்பு புகைப்பிடிப்பது மரியாதை இல்லை என்று அங்கிருந்து கிளம்பிவிட்டனர். படப்பிடிப்பு நிறைவடைந்தபோது எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அதற்குள் அந்த சம்பவம் பற்றி படக்குழுவுக்கு தெரிந்து அது ஜோக்காகிவிட்டது என்கிறார் நமீதா.

ஷாம்

என் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதை பார்த்தேன். நான் தெரியாமல் யார் மனதையாது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் ஷாம் கவ்ஷல். ஷாம் கவ்ஷலின் மகன் பாலிவுட் நடிகர் விக்கி கவ்ஷல் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X