சிங்கக் குட்டிக்குப் புட்டிப்பால்.. மிரட்டும் பிரபல நடிகை.. வீட்டுக்குக் கொண்டு போக ஆசையாம்ல!

By

துபாய்: பிரபல நடிகை, சிங்கக் குட்டிக்கு புட்டிப்பால் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil

இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில் ஒருவர், ஷாமா சிக்கந்தர்.

பிகினி போட்டோக்களின் குயின் என்கிறார்கள் இவரை. தினமும் ஒன்றிரண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்.

பைபாஸ் ரோடு

பைபாஸ் ரோடு


இவர், இந்தியில், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில படங்களில் நடித்தவர். டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை நடனம் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ள இவர், வெப் சீரிஸ் மற்றும் இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

அமெரிக்க நடிகரும் இசைக் கலைஞருமான அலெக்ஸ் ஓ நீலுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஷாமா சிக்கந்தர். ஒரு பேட்டியில் அவரைக் காதலிப்பதாகவும் ஒப்புக்கொண்டிருந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர். பிறகு வேறொரு அமெரிக்க தொழிலதிபருடன் அவருக்கு துபாயில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

சிங்கக் குட்டிக்கு பால்

சிங்கக் குட்டிக்கு பால்

தொடந்து நடித்து வரும் ஷாமா, இப்போது துபாயில் இருக்கிறார். அவர் அங்கிருந்து தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்போது சிங்கக்குட்டி ஒன்றுக்கு புட்டிப்பால் கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் குட்டி, அவர் மடியில் அழகாக உட்கார்கிறது.

பூனையை போல

பூனையை போல

பிறகு குழந்தையை போல ஓடுகிறது. பின்னர் அதற்கு புட்டிப்பால் கொடுக்கிறார் ஷாமா. அந்த சிங்கக்குட்டி, பூனையை போல இரண்டு காலில் நின்று அழகாக புட்டிப்பாலை குடிக்கிறது. இந்தக் குழந்தையை வீட்டுக்கு கொண்டு போகணும்னு ஆசை என்று கூறியிருக்கிறார் ஷாமா. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பயமே இல்லையா?

பல நெட்டிசன்ஸ், ஆஹா, அந்தக் குட்டி செம அழகு என்றும் உங்களுக்கு தைரியம் அதிகம்தான் என்றும் கூறியுள்ளார். சிலர், பயமே இல்லையா? என்றும், அந்த குட்டிக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப் போச்சு, அப்படியே தூக்கிட்டு போங்க என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X