அந்தரத்தில் தலையணை, அழகழகு பலூன்ஸ்.. பிரபல நடிகையின் நம்ப முடியாத லுக்.. வாய்பிளக்கும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள நம்ப முடியாத ஹாட் லுக் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
கொரோனா லாக்டவுன் பலருக்கு பல சீரியசான பிரச்னைகளை கொடுத்திருக்கிறது.
அது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் பலருக்குப் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது.

லாக்டவுன் நேரத்தில்
சினிமா நடிகர், நடிகைகள் பலர் இந்த லாக்டவுன் நேரத்தில் மற்ற மொழிகளை, இசையை, இன்னும் சிறப்பான நடிப்பை, கற்று வருகின்றனர். அது தொடர்பான தகவலை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம், பல நடிகைகளின் செல்லத் தோழி ஆகியிருக்கிறது சோஷியல் மீடியா. தங்கள் கருத்துக்களை அவ்வப்போது அதில் தெரிவித்து வருகிறார்கள்

போட்டோ ஆல்பம்
சிலர் இன்ஸ்டாகிராமை தங்களின் போட்டோ ஆல்பமாக மாற்றி இருக்கிறார்கள். அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்து அதை நிரப்பி வருகின்றனர். இதைப் பார்ப்பதற்காக அதிகமான நெட்டிசன்ஸ் காத்துக் கிடக்கின்றனர். நடிகைகள் பதிவு செய்யும் புகைப்படங்களை அநியாயத்துக்கு புகழ்வது அவர்களது விளையாட்டு.

ஷாமா சிக்கந்தர்
பல நடிகைகள், தங்களது ஹாட் புகைப்படங்களை கன்னாபின்னாவென்று வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதில் ஒருவர் இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர். பிகினி போட்டோக்களின் குயினான இவர், அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடிப்பார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவிப்பார்கள். ஸ்டன்னிங், செம, கார்ஜியஸ் என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.

அமெரிக்க நடிகர்
இவர், இந்தியில், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். அமெரிக்க நடிகர் அலெக்ஸ் ஓ நீலுடன் கிசுகிசுக்கப்பட்ட இவருக்கு வேறொரு அமெரிக்க தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தொடந்து நடித்து வரும் இவர், இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நூறு சதவிகித கிளாமர்
இதற்கு கேப்ஷனாக, நான் 99 சதவிகிதம் தேவதை, ஒரு சதவிகிதம் டெவில் என்று கூறியிருக்கிறார். இதற்கு பலர் கண்டபடி கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ஒருவர், ஆனா, நூறு சதவிகிதம் கிளாமர்ல மிரட்டுறீங்க' என்று தெரிவித்துள்ளார். நீங்க கொஞ்ச நாளா ஓவர் செக்ஸியா மாறிட்டு வர்றீங்களே, என்ன காரணம்? என்று மற்றொருவர் கேட்டுள்ளார்.

எங்க இருந்து சுட்டீங்க?
இன்னொரு நெட்டிசன், இதே கேப்ஷனைதான் நடிகை அமைராவும் போட்டிருக்காங்க.. எங்க இருந்து சுட்டீங்க? என்று கேட்டுள்ளார். சிலர், நீங்க உண்மையிலயே எங்களை கொல்றீங்க என்று தெரிவித்துள்ளனர். சிலர் இதை அவரது பிறந்த நாள் போட்டோ என நினைத்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











