twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுக்கு மேல தமிழ்நாடு பக்கம் வந்திடாதீங்க.. சமந்தாவுக்கு எதிராக டிரெண்டான #ShameonYouSamantha

    |

    சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாவதை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த வெப் தொடரில் நடித்த நடிகை சமந்தாவுக்கு எதிராக #ShameonYouSamantha ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகி உள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் வரும் ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

    மகேஷ் பாபு படத்துல வில்லனாகறாரு நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜூன்... கலக்குங்க சார் மகேஷ் பாபு படத்துல வில்லனாகறாரு நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜூன்... கலக்குங்க சார்

    அந்த தொடரில் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக சித்தரித்துள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

    வில்லி கதாபாத்திரத்தில்

    வில்லி கதாபாத்திரத்தில்

    சியான் விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு பிறகு மீண்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இந்த வெப் தொடரின் டிரைலரை பார்த்த தமிழர்கள் ராணுவ உடையில் இருக்கும் சமந்தாவை பார்த்த உடனே ஆத்திரம் அடைந்தனர்.

    உணர்வு இல்லையா

    உணர்வு இல்லையா

    நடிகை சமந்தா சென்னை பொண்ணு என்றும் பல்லாவாரத்தில் தான் வளர்ந்தேன் என்றும் பல இடங்களில் பூரிப்படைந்து பேசியுள்ளார். இந்நிலையில், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உருவாகி உள்ள ஒரு வெப் தொடரில் எப்படி நடிக்க சம்மதித்தீர்கள் என பலரும் சமந்தாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    எந்த அறிகுறியும் இல்லை

    எந்த அறிகுறியும் இல்லை

    தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பிலேயே கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலும், அது தொடர்பாக எந்தவொரு பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், திட்டமிட்டபடி அந்த வெப் தொடர் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என்றே தெரிகிறது.

    புரமோஷனும் பண்ணல

    புரமோஷனும் பண்ணல

    விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அந்த தொடர் குறித்த விளம்பரங்களையும் அமேசான் பிரைம் அதிகளவில் செய்யவில்லை. அப்படியே அதனை அமைதியாக ரிலீஸ் செய்து விட வேண்டும் என்கிற மனநிலையிலேயே உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஷேம் ஆன் யூ சமந்தா

    ஷேம் ஆன் யூ சமந்தா

    இந்நிலையில், தமிழ் உணர்வாளர்கள் தற்போது #ShameonYouSamantha என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு நடிகை சமந்தாவிற்கு எதிரான ட்வீட்களை பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த வெப் தொடரை ரிலீஸ் செய்ய விடாமல் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    நேரடியாகவோ மறைமுகமாகவோ

    நேரடியாகவோ மறைமுகமாகவோ

    ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எப்படி கதை அமைக்கப்பட்டு இருந்தாலும் அது வரலாற்று பிழையாகத் தான் இருக்கும். இந்த தொடரில் நடிகை சமந்தா நடிக்க சம்மதித்ததே தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

    இனத்தின் வரலாறு

    இனத்தின் வரலாறு

    "ஈழத்தின் வரலாறு..!

    தமிழினத்தின் நெருப்பாறு..!

    எரிமலை நெருப்பில் நீந்தி

    ஈழம் காத்த ஈகியர் அவர்கள்..!

    உங்கள் ஈன பலிக்கு - பழியாகாது

    எங்கள் இனத்தின் வரலாறு..!" என தமிழ் மக்கள் இந்த வெப் தொடரை தடை செய்யும் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    சமந்தா படம் பார்க்க மாட்டேன்

    சமந்தா படம் பார்க்க மாட்டேன்

    "இனி எவ்வளவு உச்ச நட்சத்திரமாக இருந்தாலும்,பிடித்த நடிகராக,இயக்குனராக இருந்தாலும்,நல்ல கதையாக இருந்தாலும் சமந்தா நடித்திருந்தால் அந்த படத்தை நான் பார்க்க போவதில்லை.என் வீட்டுத் தொலைக்காட்சியில் கூட இனி சமந்தாவின் திரைப்படங்களை காணப் போவதில்லை." என ரசிகர்கள் கொதித்துள்ளனர்.

    சாபக்கேடு

    சாபக்கேடு

    "நீ தமிழ் மகள் அல்ல தமிழ் நாட்டின் சாபக்கேடு.." என்றும் இனி தமிழ்நாட்டு பக்கம் வந்து விடாதே என்றும் ஏகப்பட்ட கடும் வசைகளை நடிகை சமந்தா மீது தமிழ் பற்றாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். முதல் வெப்சீரிஸில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த தொடர் தானே ஃபேமிலி மேன் என்கிற கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

    English summary
    Tamil peoples need ban to the upcoming Amazon Prime webseries The Family Man 2. They trending #ShameonYouSamantha in Twitter now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X