இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத சூப்பர் சீக்ரெட்டை சொன்ன ஷாமிலி!
சென்னை: பேபி ஷாமிலி என சொன்னாலே பலரது நினைவுக்கும் வந்துவிடுவார் நடிகை ஷாமிலி.
நடிகை ஷாலினியின் சகோதரியான ஷாமிலி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சூப்பர் சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார்.
சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ஜகடேக வீருடு அதிலோக சுந்தரி படத்தில் தனது தம்பியும் நடித்துள்ளார் என்பதை தெரிவித்துள்ளார்.

பேபி ஷாமிலி
அஞ்சலி பாப்பாவாக நடித்து தேசிய விருதை அந்த சிறு வயதிலேயே பெற்றவர் நடிகை ஷாமிலி. 1989ம் ஆண்டு வெளியான ராஜநடை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

சகோதரி ஷாலினி
ஷாமிலியை போலவே அவரது சகோதரி நடிகை ஷாலினியும் குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, அமர்க்களம் என சில படங்களில் ஹீரோயினாக கலக்கிய அவர் தல அஜித்தை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

பலருக்கும் தெரியாத ரகசியம்
மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியான ஜகடேக வீருடு அதிலோக சுந்தரி படத்தில் ஷாமிலி லீடு குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கி இருந்தார். தற்போது அந்த படத்தின் த்ரோபேக் போட்டோவை போட்டு அதில் இருக்கும் குட்டிப் பையன் என் தம்பி தான் என பலருக்கும் தெரியாத ரகசியத்தை கூறியுள்ளார்.

அந்த தம்பி யாரு
திரெளபதி, ருத்ர தாண்டவம் என சமீபத்தில் நடித்து கலக்கி வரும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி தான் அந்த தம்பி. ஷாமிலி, ஷாலினி மற்றும் ரிச்சர்ட் ரிஷி என ஒட்டுமொத்த குடும்பமே சிறு வயது முதல் சினிமாவில் நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











