எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இனிமே ரோஜா சீரியலில் நடிக்க மாட்டேன்.. திடீரென விலகிய வில்லி அனு!
சென்னை: சன் டிவி டிஆர்பியாக இருந்தாலும் சரி யூடியூப் டிரெண்டிங்காக இருந்தாலும் சரி உச்சத்தில் இருக்கும் ஒரு சீரியல் என்றால் அது ரோஜா சீரியல் தான்.
ரோஜா சீரியலில் ஹீரோயினுக்கு அடுத்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் வில்லி அனு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷாமிலி சுகுமார் தான்.
ஆனால், திடீரென அந்த சீரியலில் தான் நடிக்கப் போவதில்லை என்கிற முடிவை அவர் எடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ரோஜா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலை சரிகமபா நிறுவனம் தயாரித்து வருகிறது. சிபு சூரியன், பிரியங்கா நல்கரி லீடு ரோலில் நடித்து வரும் இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டல் நடிப்பை அனு கதாபாத்திரத்தில் ஷாமிலி சுகுமார் கொடுத்து வந்தார்.

பயமா இருக்கு
இந்நிலையில், திடீரென அந்த சீரியலில் இருந்து தான் விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் ஷாமிலி. மேலும், நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ரிஸ்க் எடுத்து தன்னால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

கர்ப்பமாக உள்ளேன்
அவரது பயத்திற்கு முக்கிய காரணமே அவர் தற்போது கர்ப்பமாக இருப்பது தான். தன்னை சுற்றி இருக்கும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், வெளியே செல்ல வேண்டாம் என்கிற முடிவை எடுத்துள்ளதாகவும், மருத்துவர்களும் அதே ஆலோசனையைத் தான் தனக்கு வழங்கினர் என்றும் ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

திட்டாதீங்க
அனு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கடந்த 2019ம் ஆண்டு சிறந்த வில்லிக்கான விருதை பெற்றேன். எனது கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. என்னை திட்டித் தீர்த்தது போல புதிய நடிகையை திட்ட வேண்டாம். இதெல்லாம் வெறும் நடிப்பு மட்டும் தான் என்றும் ஷாமிலி ரசிகர்களிடம் அடுத்த அனுவிற்காக கோரிக்கை வைத்துள்ளார்.

ரசிகர்கள் அதிருப்தி
ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்காவுக்கு அடுத்தபடியாக அந்த சீரியலில் சிறப்பான கதாபாத்திரத்தில் கலக்கி வரும் அனு திடீரென இப்படி அந்த சீரியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், அவரது உடல் நலன் கருதி ரசிகர்கள் சேஃப்டியாக இருங்க, குழந்தை நல்லபடியா பிறக்கும் கவலைப்படாதீங்க என வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











