அம்மாவைவிட ஹைட்டான அஜித் மகள்.. எவ்ளோ அழகா இருக்காருன்னு பாருங்க.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
சென்னை: நடிகை ஷாமிலி தனது சகோதரி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்காவுடன் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஷேர் செய்து டிரெண்டாக்கி உள்ளார்.
சமீபத்தில், ஏகே 61 லுக்கில் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த புகைப்படங்களை ஷாமிலி பதிவிட்டு இருக்கிறார்.
கண்ணாடி அணிந்து கொண்டு அம்மா மற்றும் சித்தியுடன் அனோஷ்கா இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

டிரெண்டாகி விடும்
நடிகர் அஜித்தின் புகைப்படம் அல்லது அவரது குடும்பத்தினர் புகைப்படங்கள் எப்போது சமூக வலைதளங்களில் வெளியானாலும் அது உடனடியாகவே வேறலெவலில் டிரெண்டாகி விடும். வலிமை படம் வெளியான நிலையில், அடுத்ததாக ஏகே 61 லுக்கில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சமீபத்தில் வெளியாகி டிரெண்டாகின. முன்னதாக நடிகர் அஜித் சைக்கிள் ஓட்டிய புகைப்படங்களும், ரஷ்யாவில் பைக் டூர் செய்த புகைப்படங்களும் டிரெண்டாகின. அஜித்தின் மகன் ஆத்விக்கின் புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் செம வைரலானது குறிப்பிடத்தக்கது.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்
சமூக வலைதளத்தில் நடிகர் அஜித்தின் குடும்பம் இல்லாத நிலையில், ஷாலினியின் சகோதரி ஷாமிலி மட்டும் சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக உள்ளார். அடிக்கடி தனது சகோதரி ஷாலினியுடன் அவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு ஹார்ட்டின்களை அள்ளி வந்த அவர், தற்போது அஜித்தின் மகள் புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார்.

அஜித் மகள்
தனது மகளுக்காக அவரது பள்ளியில் நடிகர் அஜித் டயர் ஓட்டிய வீடியோக்கள் எல்லாம் டிரெண்டாகின. சின்னக் குழந்தையாக இருந்த அனோஷ்கா கிடுகிடுவென தற்போது வளர்ந்து உள்ள நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

அம்மாவோட ஹைட்
அம்மா மற்றும் சித்தி ஷாமிலி உடன் அனோஷ்கா இருக்கும் ஒரு புகைப்படத்தில் அம்மா ஷாலினியோட ரொம்ப ஹைட்டாகவும் சித்தி ஷாமிலி ஹைட்டுக்கு சீக்கிரமே போட்டி போடும் அளவுக்கு இருக்கும் அனோஷ்காவின் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கண்ணாடி அணிந்து கொண்டு மகளிர் தின கொண்டாட்டத்தை அம்மாக்களுடன் கொண்டாடி வருகிறார் அனோஷ்கா.

சுத்திப் போடுங்க
நடிகர் அஜித்தின் மகள் போட்டோவை எல்லாம் இப்படி போடாதீங்க ஷாமிலி என்றும் அவருக்கு கண்ணு பட்டுடும், சுத்தி போடுங்க என்றும் அஜித் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். சிறிய குழந்தையாக இருந்தவர் நல்லா வளர்ந்து விட்டாரே என்றும் மூன்று தேவதைகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வலிமை படத்துக்கு
சமீபத்தில், ஷாலினி, அனோஷ்கா மற்றும் ஷாமிலி மூவரும் இணைந்து சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் வலிமை படத்தை பார்த்து ரசித்தனர். மூவரும் வெளியே வரும் போது, அஜித் சார் எப்படி இருக்காருன்னு ரசிகர்கள் கேட்க, நல்லா இருக்காரு என ஷாலினி பதில் அளித்த வீடியோவும் அஜித் ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் கூடுதல் பூஸ்ட் என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











