என்னது தனுஷ் படத்துல இருந்து அஜீத் மச்சினியை தூக்கிட்டாங்களா?
சென்னை: தனுஷ் நடித்து வரும் கொடி படத்திலிருந்து நடிகை ஷாம்லியை தூக்கி விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களைத் தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து 'கொடி' படத்தை துரை.செந்தில்குமார் இயக்கி வருகிறார் .
முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது.

கொடி
ஜனவரி 5ல் தொடங்கிய கொடி படமானது தற்போது பாதிக்கு மேல் வளர்ந்திருக்கிறது. தனுஷ் அரசியல்வாதியாக நடிக்கும் இப்படம் அரசியலின் மற்றொரு இருண்ட பக்கங்களை எடுத்து கூறும் என்று கூறுகின்றனர்.

2 நாயகிகள்
இதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதால் த்ரிஷா, ஷாம்லி என்று 2 நாயகிகளை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்தனர். தனுஷுடன் முதன்முறை ஜோடி போடும் த்ரிஷா இந்தப் படத்தில் வில்லியாக நடித்து வருகிறார்.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை வருகின்ற பிப்ரவரி 21 ம் தேதியுடன் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் தனது பேவரைட் ரம்ஜான் தினத்தில் படத்தை வெளியிட தனுஷ் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஷாம்லி எங்கே
இந்நிலையில் கொடி படத்தில் வில்லியாக நடித்து வரும் த்ரிஷா பற்றி மட்டுமே செய்திகள் வெளியாகி வருகின்றன.மற்றொரு நாயகியான ஷாம்லி குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து விசாரிக்கும் போது அவர் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறுகின்றனர்.

பிரேமம் நாயகி
ஷாம்லிக்குப் பதிலாக தற்போது பிரேமம் மற்றும் காதலும் கடந்து போகும் நாயகி மடோனா செபாஸ்டினை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாம். இந்தப் படத்திலிருந்து ஷாம்லி ஏன் விலகினார்? என்ற காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனினும் படத்தில் ஷாம்லி இல்லை என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது.

முதலில் அனிருத்
இந்தப் படத்தில் முதலில் இசையமைக்க ஒப்பந்தமான அனிருத்தை நீக்கி விட்டு அவருக்குப் பதில் சந்தோஷ் நாராயணனை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில் தற்போது ஷாம்லியும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து 'கொடி'யில் இருந்து விடுபடப் போவது யார்ன்னு தெரியலையே?


Click it and Unblock the Notifications











