Vijay - ஜோதிகா, சிம்ரன்னு 2 குதிரைகள்.. அதிர்ச்சியை கிளப்பிய விஜய்யின் பேச்சு.. புது பஞ்சாயத்து ஆரம்பம்
சென்னை: Vijay (விஜய்) ஜோதிகா, சிம்ரன் பற்றி விஜய் பேசியதாக ஷாம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக ஒரு பெட்ரூம் காட்சியோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சியோ இருக்கும் என்று நினைத்தேன். இப்போதெல்லாம் வில்லன்களை நடிகைகளுடன் நடிக்கவிட மாட்டேங்கிறார்கள்.

குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்ட மாதிரி த்ரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை. 150 படங்களில் நான் பண்ணாத அட்டூழியமா?" ஆபாசமாக பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
த்ரிஷா கண்டனம்: மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு த்ரிஷாவின் கவனத்துக்கும் சென்றது. அதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகான் இப்படி பேசியது ஆணாதிக்க சிந்தனையுடனும், பெண்கள் மீது வெறுப்பை பரப்பும் வகையிலும் இருக்கிறது. அவர் என்னுடன் தொடர்ந்து நடிக்க ஆசைப்படட்டும். ஆனால் இனி நான் அவருடன் இணைந்து நடிக்கமாட்டேன். அவர் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு என்று காட்டமாக" தெரிவித்திருந்தார்.
மன்சூர் விளக்கம்: த்ரிஷா மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, மடோனா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மன்சூர் அலிகான், "நான் இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். த்ரிஷாவிடம் தவறாக கட் செய்து காண்பித்திருக்கிறார்கள். எனது படம் வெளியாகும் நேரத்திலும் அரசியல் ரீதியாகவும் இதை செய்கிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. போய் பொழப்ப பாருங்க" என அலட்சியமாக தெரிவித்திருந்தார்.
விஜய் பேசியது சரியா?: மன்சூர் அலிகானின் விவகாரம் இப்படி பற்றி எரிய தொடங்கியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க விஜய் தன்னிடம் ஒரு விஷயம் கூறியதாக நடிகர் ஷாம் பேசியிருக்கும் வீடியோ அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அதாவது அவர் ஒரு பேட்டியில், "12 பி படத்தில் நான் நடிகராக அறிமுகமாகிவிட்டேன். அதனை விஜய்யிடம் சொன்னேன். அப்போது அவர், 'டேய் யாரு டா நீ முதல் படத்திலேயே ஜோதிகா, சிம்ரன்னு இரண்டு குதிரைகளோட வர' என்று கேட்டதாக தெரிவித்திருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நடிகைகளை விஜய் ஏன் குதிரை என்று சொல்ல வேண்டும். அதுவும் ஆபாச தொனியில்தான் சொல்லியிருக்கிறார். மன்சூர் பேசியது கண்டிப்பாக தவறுதான். அதேபோல் விஜய் ஷாமிடம் அப்படி பேசியதும் தவறுதானே என அந்த வீடியோவை ஷேர் செய்துவருகின்றனர். ஏற்கனவே த்ரிஷா விவகாரத்தில் விஜய் இன்னமும் வாய் திறக்காமல் இருக்கும் சூழலில் தற்போது இந்த விவகாரம் புதிதாக கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











