திரைத் துளி
"மிஸ் இந்தியா போட்டியில் வெல்பவர் தான் இந்தியாவின் சார்பில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டிகளில் பங்கேற்க முடியும்.மிஸ் இந்தியா போட்டியில் இதில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர் தான் மிஸ் வோர்ல்ட் போட்டியில் பங்கேற்க முடியும்.3வது இடம் பிடிப்பவர் மிஸ் எர்த் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்.
இதனால் பெமினா மிஸ் இந்தியா போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
நாடு முழுவம் தேர்வுச் சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் இந்தப் போட்டிக்கு அழகிகள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
கடந்த மாதம் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகளின் முடிவில் 23 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இறுதிச் சுற்றில் சென்னையைச் சேர்ந்த ஷம்ஷத்தும் தேர்வாகியுள்ளார்.
மிஸ் இந்தியா-2005யைத் தேர்வு செய்யும் இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.
போட்டியில் வெல்பவருக்கு கடந்த ஆண்டின் மிஸ் இந்தியாவான தனுஸ்ரீ பட்டத்தை சூட்டுவார்.
இதில் பங்கேற்கும் சென்னையைச் சேர்ந்த ஷம்சாத் பேகம் நல்லி சில்க்ஸ், ஹீரோ ஹோண்டா, ஹார்ப்பிக் கிளீனர்உள்ளிட்ட டிவி, பத்திரிக்கை விளம்பரங்களில் நடித்துள்ளார். 4 வருடமாக மாடலிங்கில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











