நடு ரோட்டில் காரை நிறுத்தி ரசிகருடன் உரையாடிய ரன்பீர் கபூர்.. எப்படியெல்லாம் புரமோஷன் பண்றாரு!
மும்பை: அக்ஷய் குமாரின் இதிகாச திரைப்படமான சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்துக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ அதே நிலைமை தான் தற்போது ரன்பீர் கபூர் நடித்துள்ள ஷம்ஷீரா திரைப்படத்துக்கும் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் ராஜமெளலியின் பாகுபலி படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த நிலையில், பாலிவுட்டிலும் அப்படியொரு பாகுபலியை உருவாக்கி விட வேண்டும் என பல இயக்குநர்கள் முயற்சித்து காசை கரியாக்கி வருகின்றனர்.
கேஜிஎஃப் வில்லன் நடிகர் சஞ்சய் தத்தை போட்டு விட்டால் ஹிட் அடித்து விடும் என நினைத்த நிலையில், திரைக்கதை மற்றும் மேக்கிங் தான் முக்கியம் என்பதை ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் பாலிவுட்டுக்கு பலமாக சொல்லி வருகின்றனர்.

ஷம்ஷீரா
கரண் மல்கோத்ரா இயக்கத்தில் 150 கோடி பட்ஜெட்டில் ரன்பீர் கபூர், வாணி கபூர், சஞ்சய் தத் நடிப்பில் இந்த வாரம் வெளியான ஷம்ஷீரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக சாதிக்கவில்லை. தென்னிந்திய படங்கள் தொடர்ந்து பாலிவுட்டில் கல்லா கட்டி வரும் நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களையும் வரலாற்று சிறப்புமிக்க படங்களையும் பார்க்கவே ரசிகர்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ரோட்டில் நின்ற கார்
ஷம்ஷீரா வெளியாகி உள்ள நிலையில், ரன்பீர் கபூரின் கார் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்த போது அதனை ரசிகர் ஒருவர் சேஸ் செய்ய, உடனடியாக அவருக்காக நடு ரோட்டில் காரை நிறுத்தி, கார் கண்ணாடியை இறக்கி ரசிகருடன் சில நொடிகள் உரையாடி விட்டு ரன்பீர் கபூர் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

எப்படியெல்லாம் புரமோஷன் பண்றாரு
தனது புதிய படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக போகவில்லை என்பதை அறிந்து கொண்ட நிலையில், உடனடியாக இப்படியொரு வீடியோ டிரெண்டாவதே புரமோஷன் உத்தி தான் என்றும் இதற்கு முன் ரன்பீர் கபூரை யாருமே அவர் காரில் செல்லும் போது சேஸ் செய்து கொண்டு சென்று பேசியது இல்லை என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மனைவிக்கு வெற்றி
அப்பா மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியா பட் நடித்த சடக் 2 படுதோல்வி அடைந்த நிலையில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி மற்றும் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. ஆனால், திருமணத்துக்கு பிறகு வெளியான கணவர் ரன்பீர் கபூரின் படம் தோல்வியை சந்தித்ததை முன்னிட்டு அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிரம்மாஸ்த்ரா என்னவாகும்
ஷம்ஷீரா படத்தை விட பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள பிரம்மாஸ்திரம் படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், ஷாருக்கான், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா, மெளனி ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷம்ஷீரா படம் சொதப்பிய நிலையில், அந்த தாக்கம் பிரம்மாஸ்திரம் படத்தையும் பாதிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











