twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நஷ்ட ஈடுதான வேணும், இந்தாங்க... படாரென இறங்கிய ஹீரோ... தடையை நீக்குகிறது தயாரிப்பாளர் சங்கம்!

    By
    |

    சென்னை: நஷ்ட ஈடு தர சம்மதித்ததை அடுத்து இளம் ஹீரோ மீதான தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    தமிழில் விக்ரம், சீனு ராமசாமி படங்களில் நடிக்க இருந்தவர் இளம் ஹீரோ ஷேன் நிகம்.

    மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான இவர், கும்பளங்கி நைட்ஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

    அந்த 7ஜி ரெயின்போ காலனிக்குள் இந்த ஆயிரத்தில் ஒருவன் இருப்பார்.. ஹேப்பி பர்த்டே செல்வராகவன் சார்!அந்த 7ஜி ரெயின்போ காலனிக்குள் இந்த ஆயிரத்தில் ஒருவன் இருப்பார்.. ஹேப்பி பர்த்டே செல்வராகவன் சார்!

    கூடுதல் சம்பளம்

    கூடுதல் சம்பளம்

    வெயில் என்ற படத்தில் நடிக்க ரூ.40 லட்சம் சம்பளத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது, கூடுதலாக சம்பளம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் மறுத்ததால், அந்த படத்துக்கு டப்பிங் பேச மறுத்துவிட்டாராம். அதோடு படத்துக்கான தனது கெட்டப்பை மாற்றி, புதிய புகைப்படங்களை வெளியிட்டார்.

    தடை விதிப்பு

    தடை விதிப்பு

    அதிர்ச்சி அடைந்த ஜோபி ஜார்ஜ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். ஷேன் நிகாமால், ரூ. 3 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜோபி ஜார்ஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு அவர் நடித்து வந்த குர்பானி படத்தின் தயாரிப்பாளரும் புகார் செய்தார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் குறித்து தரகுறைவாகப் பேசியதால், அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

    தமிழ் படங்களில்

    தமிழ் படங்களில்

    தடை தொடர்ந்ததால், ஷேன் நிகாம் படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், இந்தப் பிரச்னை பற்றி நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது அவரால் படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அவர் சரிகட்ட வேண்டும் என்று ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.

    மோகன்லால்

    மோகன்லால்

    இந்நிலையில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்பதாகவும், வெயில் படத்துக்காக பேசப்பட்ட 40 லட்சத்தில் பாக்கித்தொகையான 16 லட்சம் தனக்கு வேண்டாம் என்றும் ஷேன் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள், நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஒப்புக்கொண்டார்

    ஒப்புக்கொண்டார்

    சங்கத்தின் தலைவர் மோகன்லால் தலைமையில், இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நஷ்ட ஈடு தர நடிகர் ஷேன் நிகம் ஒப்புக்கொண்டார். ஆனால், எவ்வளவு தொகையைத் தர ஒப்புக்கொண்டார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் அவருக்கான தடையை கேரள தயாரிப்பாளர் சங்கம் நீக்கும் என்று தெரிகிறது.

    English summary
    Actor Shane Nigam agreed to give compensation to producers
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X