உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு... மன்னிப்புக் கேட்டார் இளம் ஹீரோ... ஏற்குமா தயாரிப்பாளர் சங்கம்?

By

கொச்சி: தயாரிப்பாளர்கள் குறித்து தவறாக பேசியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்று நடிகர் ஷேன் நிகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் இளம் ஹீரோ, ஷேன் நிகம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷேன், வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

வெயில் படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென தனது தலைமுடியை மாற்றி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் நிகம்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனால் வெயில் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டது. இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார் நிகம்.

நடிக்கத் தடை

நடிக்கத் தடை

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்த உறுதியை மீறி, திடீரென புதிய கெட்டப்பை வெளியிட்டார் நிகம். ஆத்திரமடைந்த ஜார்ஜ், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் புகார் செய்தார். விசாரித்த சங்க நிர்வாகிகள், ஷேன் நிகமுக்குத் தடை விதித்தனர்.

ரூ.7 கோடி

ரூ.7 கோடி

அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் திருப்தித் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

மன நோயாளிகள்

மன நோயாளிகள்

இதற்கிடையே தயாரிப்பாளர்களை மன நோயாளிகள் என்பது போல ஷேன் நிகம் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது. இதனால் கோபமடைந்த கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், இனி பேச்சுவார்த்தையை தொடரப்போவதில்லை, தடை தொடரும் என்று அறிவித்தனர்.

மன்னிப்பு கடிதம்

மன்னிப்பு கடிதம்

இதற்கிடையில் , தான் தவறு ஏதும் செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ஷேன். இதையடுத்து தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ரஞ்சித், ஷேன் நிகமின் மன்னிப்புக் கடிதம் வந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X