Don't Miss!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- News மத்திய சென்னையில் ஒரு லட்சம் வாக்குகளை திமுக நீக்கிவிட்டது.. பாஜக வினோஜ் செல்வம் பகீர் குற்றச்சாட்டு
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
செல்லாது செல்லாது... பேஸ்புக்ல மன்னிப்புக் கேட்டா எப்படி? இளம் ஹீரோவுக்கு செக்!
கொச்சி: கேரள தயாரிப்பாளர்களை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் நடிகர் ஷேன் நிகம் பேஸ்புக்கில் கூறிய மன்னிப்பை ஏற்க முடியாது என்று கேரள நடிகர் சங்கமான 'அம்மா' தெரிவித்துள்ளது.
அட்லீன்னாங்க... அவருன்னாங்க... இப்ப மலையாள இயக்குனரை டிக் செய்த ஷாரூக் கான்.
ஷேன் நிகம்
மலையாள சினிமாவின் இளம் ஹீரோ, ஷேன் நிகம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷேன், வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார். வெயில் படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பது ஒப்பந்தம். ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென தனது தலைமுடியை மாற்றி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் நிகம்.
அதிர்ச்சி
இதனால் வெயில் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டது. இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார் நிகம்.
புது கெட்டப்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்த உறுதியை மீறி, புதிய கெட்டப்பை வெளியிட்டார் நிகம். அதில், தலைமுடியை, மண்டையின் இரண்டு பக்கமும் நன்றாக ஷேவ் செய்திருந்தார்.
மீண்டும் புகார்
ஆத்திரமடைந்த ஜார்ஜ், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் புகார் செய்தார். விசாரித்த சங்க நிர்வாகிகள், ஷேன் நிகமுக்குத் தடை விதித்தனர். அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் திருப்தித் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
பேச்சு
இந்நிலையில், இந்தப் பிரச்னையை பேசித் தீர்க்க, மலையாள நடிகர்கள் சங்கமான, அம்மாவும் கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும் முடிவு செய்தது. இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, கேரள கலாசாரத்துறை அமைச்சர் ஏ.கே.பாலனை சந்தித்துப் பேசினார் ஷேன் நிகம்.
பேட்டி
சந்திப்புக்குப் பின் பேசிய ஷேன் நிகம், கொஞ்சம் ஓவராக போய், தயாரிப்பாளர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல நடந்துகொள்கிறார்கள் என்று திட்டிப் பேட்டியளித்தார்.
கோபம்
இதனால் கோபமான கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், இனி பேச்சுவார்த்தையை தொடரப்போவதில்லை, தடை தொடரும் என்று அறிவித்தனர். இன்னும் 10 நாட்களுக்குள் அவர் டப்பிங்கை பேசி முடிக்கவேண்டும். இல்லை என்றால், வேறு ஒருவர் பேசுவார். அவரிடம் ரூ.7 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.
மன்னிப்பு
இதற்கிடையே, ஷேன் நிகம், தான் கூறியது தவறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டது என்று கூறி, பேஸ்புக்கில் மன்னிப்புக் கேட்டிருந்தார்.
இடைவேளை பாபு
ஆனால் இதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வின் பொதுச்செயலாளர் இடைவேளை பாபு, வரும் 22 ஆம் தேதி நடக்கும் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டத்துக்குப் பிறகே, ஷேன் நிகம் பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.