ஹேர்ஸ்டைல் பஞ்சாயத்து... நடிகர் சங்கக் கூட்டத்தில் ஹீரோ சரண்டர்... முடிகிறது பிரச்னை

By

கொச்சி: நடிகர் சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாகக் கூறியதை அடுத்து ஹேர் ஸ்டைல் பஞ்சாயத்து ஹீரோவின் பிரச்னை முடிவுக்கு வர இருக்கிறது.

மலையாள சினிமாவின் இளம் ஹீரோ, ஷேன் நிகம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷேன், வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

வெயில் படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி,
ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென தலைமுடியை மாற்றி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

மாற்ற மாட்டேன்

மாற்ற மாட்டேன்

இதனால் வெயில் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டது. இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார் நிகம்.

நடிக்கத் தடை

நடிக்கத் தடை

இந்நிலையில், திடீரென புதிய கெட்டப்பை வெளியிட்டார் நிகம். ஆத்திரமடைந்த ஜார்ஜ், மீண்டும் புகார் செய்தார். விசாரித்த சங்க நிர்வாகிகள், ஷேன் நிகமுக்குத் தடை விதித்தனர். அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் திருப்தித் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

தரக்குறைவாக

தரக்குறைவாக

இதற்கிடையே தயாரிப்பாளர்களை மன நோயாளிகள் என்பது போல ஷேன் நிகம் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது. கோபமடைந்த கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், இனி பேச்சுவார்த்தையை தொடரப்போவதில்லை, தடை தொடரும் என்று அறிவித்தனர்.

மன்னிப்பு

மன்னிப்பு

இதற்கிடையில், தான் தவறு ஏதும் செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ஷேன். இதையடுத்து தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு அவர் கடிதம் அனுப்பினார்.

அம்மா செயற்குழு

அம்மா செயற்குழு

இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வின் செயற்குழு நேற்று கூடி பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் ஷேன் நிகாமும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாக அவர் கூறினார். அவரால் தடைபட்டுள்ள, குர்பானி, வெயில், உல்லாசம் ஆகிய 3 படங்களையும் முடித்துக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

பிரச்னை முடியும்

பிரச்னை முடியும்

இதை ஏற்றுக்கொண்ட நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்துக்கு அதிகாரபூர்வமாக கடிதம் மூலம் தெரியப்படுத்த உள்ளது. இதோடு இந்தப் பிரச்னை முடியும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X