காதல் மனைவிக்கு ஆடம்பர பங்களா..தங்க வைர நகைகளை பரிசளித்த கணவர்..நெகிழ்ந்த நடிகை பூர்ணா!
நடிகை பூர்ணாவுக்கு அவரது கணவர் திருமண பரிசாக சொகுசு பங்களா, தங்க வைர நகைகளையும் பரிசாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் பூர்ணா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமான நடிகையான பூர்ணா கேரளாவை சேர்ந்தவர். இவரது உண்மையான பெயர் ஷாம்னா காசிம் சினிமாவிற்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார்.

நடிகை பூர்ணா
நடிகை பூர்ணாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷிஃப் அலிக்கும் மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயமான போட்டோவை நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும், ஆஷிஃப் அலி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபிஎஸ் குரூப் என்ற நிறுவனத்தின் சிஇஓ.வாக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

கோலாகலமாக நடந்த திருமணம்
இதையடுத்து கடந்த மாதம் ஆஷிஃப் அலிக்கும் எனக்கும், ஜூன் 12ந் தேதி துபாயில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்துவிட்டது. விசா பிரச்சனை காரணமாக பலர் திருமணத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை. தற்போது கணவருடன் துபாயில் வசித்து வருகிறேன். திருமணம் துபாயில் முடிந்ததால், வரவேற்பு நிகழ்ச்சியை கேரளாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறி திருமண போட்டோவை ஷேர் செய்திருந்தார்.

பல கோடியில் பரிசு
இதையடுத்து, ஆஷிஃப் அலி தனது காதல் மனைவிக்காக பல கோடியில் பரிசு பொருளை திருமண பரிசாக கொடுத்துள்ளார். அதில், 2700 கிராமில் தங்கம் மற்றும் வைர நகைகளை பரிசாக கொடுத்துள்ளார். இந்த தங்க நகையின் மதிப்பு மட்டும் ரூ.1.30 கோடி என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ரூ.25 கோடி மதிப்பிலான ஆடம்பர வீட்டை பரிசாக அளித்துள்ளார்.

வாயை பிளந்த ரசிகர்கள்
அதனுடன், பூர்ணா ஒரு புத்தம் புதிய கார் மற்றும் சில நிறுவனங்களின் பங்குகளின் உரிமையாளரானார், அவருக்கு ஷானித் இவைகளை வழங்கி உள்ளார். இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.30 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாயை பிளந்த படி, புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிட்டாங்க என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











