ஷங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த ஹீரோக்கள்... ஜென்டில்மேன், முதல்வன் படங்களின் முதல் ஹீரோ இவரா?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வருகின்றன.

ராம் சரணின் 15வது படமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு பதிலாக இன்னொரு ஹீரோ நடிக்கவிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல், ஷங்கர் இயக்கத்தில் இதற்கு முன்பு நடிக்க மறுத்த ஹீரோக்களின் லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.

 Shankar: Actors who miss the hero chance in Shankars direction...

ஷங்கரை மிஸ் செய்த ஹீரோக்கள்
ஷங்கர் தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2, ராம் சரணின் கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார். இதில், கேம் சேஞ்சர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது பவன் கல்யான் என தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், அவருக்கு பதிலாக ராம் சரண் கமிட் ஆகியுள்ளார்.

அதேபோல், ஷங்கரின் கனவுப் படமாக வெளியான எந்திரனில் ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார். அதன் இரண்டாம் பாகமான 2.O படத்திலும் ரஜினியே ஹீரோவாக நடித்தார். ஆனால், இந்தப் படம் கமல் நடிப்பில் ரோபோ என்ற பெயரில் உருவாக இருந்தது. அப்போது கமலின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் ரஜினியை நடிக்க வைத்துள்ளார் ஷங்கர். இதில் கமல் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என ரஜினி மறுத்த போதும், ஷங்கர் அவரை விடவில்லையாம்.

 Shankar: Actors who miss the hero chance in Shankars direction...

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்காகவே ஷங்கர் எழுதிய கதை தான் முதல்வன். ஒருநாள் முதல்வர் என பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் தாறுமாறாக ஹிட் அடித்தது. இதில், ரஜினியை ஹீரோவாக நடிக்கக் கேட்டுள்ளார் ஷங்கர். ஆனால், அப்போதைய அரசியல் சூழல் காரணமாக ரஜினி மறுத்துவிட்டாராம், அதன்பின்னரே அர்ஜுன் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். ஒருவேளை இந்தப் படத்தில் ரஜினி நடித்திருந்தால், பாட்ஷா படத்தின் சாதனையை முறியடித்திருக்கும்.

அதேபோல், ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் ஜீன்ஸ். பிரசாந்துக்கு கம்பேக்காக அமைந்த இந்தப் படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், பிரசாந்துக்கு முன்பு அப்பாஸை தான் ஹீரோவாக நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம் ஷங்கர். அப்பாஸின் மேனேஜர் செய்த குளறுபடியால் அது நடக்காமல் போக, பிரசாந்த் சீனில் வந்துள்ளார்.

 Shankar: Actors who miss the hero chance in Shankars direction...

அதுமட்டும் இல்லாமல் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேனில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் கருத்தியல் ரீதியாக மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க சரத்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஷங்கர். ஆனால், அப்போது சரத்குமார் ரொம்பவே பிஸியாக இருந்ததால், இறுதியாக அர்ஜுனை நடிக்க வைத்துள்ளார் ஷங்கர்.

ஒட்டுமொத்தமாக சரத்குமாரும் அப்பாஸும் தான் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். மற்றபடி ரஜினி, கமல் இருவரும் ஒரு படத்தை மிஸ் செய்திருந்தாலும், இன்னொரு சந்தர்பத்தில் கூட்டணி அமைத்து வெற்றியும் கண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X