»   »  கமல் நடிப்பில் இந்தியன் 2-ம் பாகம்.. தயாரிக்கிறார் ஏ எம் ரத்னம்?

கமல் நடிப்பில் இந்தியன் 2-ம் பாகம்.. தயாரிக்கிறார் ஏ எம் ரத்னம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் இயக்க, கமல் ஹாஸன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

1996-ல் வெளியானது இந்தியன் படம். சுஜாதா வசனம் எழுத, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

கவுண்டமணி - செந்திலின் நகைச்சுவை படத்தின் மிகச் சிறப்பான அம்சமாக ரசிக்கப்பட்டது. பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் நடக்கின்றன. ஏ.எம்.ரத்னமே இந்தப் படத்தையும் தயாரிக்கப் போகிறாராம். இதற்கான கதையை இயக்குநர் ஷங்கர் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

சந்திப்பு

சந்திப்பு

சமீபத்தில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும், ஷங்கரும் சந்தித்துப் பேசி இந்த படம் குறித்து இறுதி செய்துள்ளனர். இந்தப் படத்தை எப்போது தொடங்குவது என்பதில் ஷங்கருக்கு பெரும் குழப்பம் உள்ளதாம்.

எந்திரன் 2

எந்திரன் 2

ஷங்கர் தற்போது ‘எந்திரன்' 2-ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதில் ரஜினியை நாயகனாகவும், விக்ரம் அல்லது ஷாரூக்கானை வில்லனாகவும் நடிக்க வைக்கும் திட்டம் உள்ளதாம்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

ரஜினி அடுத்தடுத்து இரு நடுத்தர பட்ஜெட் படங்களில் நடிக்கவிருப்பதால், அதற்குள் இந்தியன் 2 படத்தின் திரைக்கதையை உருவாக்கும் பொறுப்பை தனது உதவி இயக்குநர்களிடம் ஒப்படைத்திருக்கிறாராம் கமல்.

English summary
According to reports, Shankar and AM Rathnam have recently met and discussed a sequel to Indian 2 with Kamal in lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil