இந்தின் 2 படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா? ரசிகர்கள் பொறுமை காப்பார்களா?

சென்னை: பிரம்மாண்ட ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ' இந்தியன் 2 'திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

2017ம் ஆண்டு இந்தியன் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பின் விபத்து, கொரோனா பாதிப்பு, லைகாநிறுவனத்துடனான பிரச்சனை என்று இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 7 ஆண்டுகளான நடந்து தற்போது வெளியாக உள்ளது. முதலில் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட இந்தியன்2 திரைப்படம் தற்போது ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Indian 2 Kamal haasan 2

இந்தியன் 2: இதற்கான ப்ரோமோஷன் வேலை சென்னை, மும்பை, துபாய் என படு ஜோராக நடந்து வருகிறது. இந்தியன் 2 டிரைலரில் மற்றும் பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிரைலரில், கமல் பல கெட்டப்களில் வருவதால், இந்தியன் தாத்தா நாட்டில் நடக்கும் ஊழலை தடுத்து நிறுத்த மீண்டும் கம்பேக் கொடுப்பது போல கதையம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதுதான் தற்போது பேசும்பொருளாக இருக்கின்றது.

சேனாதிபதிக்கு 106 வயசு: அதேப போல இந்தியன் படத்தில் சேனாதிபதி 1918ம் ஆண்டு பிறந்தவர் போல காட்டப்பட்டு இருப்பார்கள். இப்படி இருக்கும் போது இப்போது சேனாதிபதிக்கு 106 வயது. இந்த நிலையில் அவரால் எப்படி வர்மக்கலை உத்தியைக் கையாண்டு சண்டை போட முடியும் என்று நேயர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் கொடுத்த ஷங்கர்,சேனாபதி வர்ம கலை பயின்றவர், ஆரோக்கியமான உணவு, சுய ஒழுக்கம், யோகா என்று கடைப்பிடித்தால் வயதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றார். அதே போல கமலும்.. சூப்பர் மேன், ஹனுமான் போன்றவர்களின் வயதை யாரும் கேட்கவில்லை. ஹனுமான் எல்லா இடங்களில் சுற்றியும், யுகங்களை கடந்து வருகிறார். அதனால் தான் அவரை தெய்வங்களிலேயே நீண்டகாலம் வாழ்ந்தவர் என்று கூறுகிறீர்கள் என்று கமலும் விளக்கி இருந்தார்.

Indian 2 Kamal haasan 2

ரன்னிங் டைம்: இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் ரன்னிங் டைம் குறித்து தணிக்கைக்குழுவின் சான்றிதழ் வெளியாகி உள்ளது. அதில் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் கதை நீண்டு கொண்டே போனதால் தான் இந்தியன் 3 படம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியன் 2 ரன்னிங் டைம் 3 மணி நேரமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றன. இந்த 3 மணி நேரமும் ரசிகர்கள் பொறுமையாக இருப்பார்களா... சுவாரஸ்யமான காட்சிகள் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X