Ramoji Rao Death: ராமோஜி ராவ் காலமானார்.. ராமோஜி ராவ் சிட்டியில் ஷங்கர், ராம்சரண் மெளன அஞ்சலி

ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் அதிகம் படமாக்கப்பட்டு வரும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு சொந்தக்காரரான ராமோஜி ராவ் ஹைதராபாத்தில் இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. திரைப்பட ஸ்டூடியோ மட்டுமின்றி ETV நிறுவனத்தையே நடத்தி வந்தவரும் ராமோஜி ராவ் தான் என்பதால் நாடு முழுவதும் இருந்து ஏகப்பட்ட தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் ராமோஜி ராவ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஊடகவியலாளரும் தொழிலதிபருமான செருகூரி ராமோஜி ராவ் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை 4.50 மணிக்கு காலமானார். கடந்த 5 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக நானக்ராம்குடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராமோஜி ராவ் அனுமதிக்கப்பட்டார். உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

Ramoji Rao death Shankar Ram Charan Game Changer


அவரது மறைவுக்கு ஜனாபதி திரெளபதி முர்மு, நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை கங்கனா ரனாவத்தும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


ராமோஜி ராவ் காலமானார்: தெலங்கானாவின் மிகப்பெரிய தொழிலதிபரான ராமோஜி ராவ் ஈ நாடு பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார். ஈ டிவி அனைத்தும் அவரது உழைப்பால் உருவானவை தான். சினிமா படப்பிடிப்புக்காக தெலுங்கு நடிகர்கள் ஏன் சென்னையில் உள்ள ஏவிஎம் மற்றும் மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என நினைத்த ராமோஜி ராவ் தன்னுடைய நிலத்தை ராமோஜி ராவ் பிலிம் சிட்டியாக உருவாக்கினார். இன்று தமிழ் சினிமாவின் பல பெரிய படங்களே அங்கு தான் படமாக்கப்பட்டு வருகின்றன. பாலிவுட் முதல் டோலிவுட் படங்கள் என பல படங்கள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராமோஜி ராவ் இன்று அதிகாலை திடீரென மறைந்தது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷங்கர், ராம்சரண் இரங்கல்: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தான் நடைபெறுகிறது. இன்று காலை படப்பிடிப்புக்கு சென்ற ஷங்கர், ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். படக்குழுவினருடன் ராமோஜி ராவ் மறைவுக்கு சில நிமிடங்கள் அஞ்சலி செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X