30 years of Shankar: ஷங்கரின் 30 ஆண்டு திரைப்பயணம்..தோல்வியின் அர்த்தம் தெரியாத பிரம்மாண்ட நாயகன்!

சென்னை: ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கர் பிரமாண்டமான படங்களை மட்டுமல்லாமல் பிரமாண்டமான வெற்றிகளையும் பெற்று தமிழ்த் திரையுலகின் அந்தஸ்த்தை உயர்த்தியவர்.

இதுவரை 12 தமிழ்ப்படங்களை எடுத்து இதுவரை தோல்விகளையே சந்திக்காத இயக்குநர் என்று பெயர் எடுத்துள்ளார். இந்த பெருமை தமிழ் சினிமாவில் எந்த இயக்குநருக்கும் கிடைக்கவில்லை.

Shankar completed 30 years in cinema after directing Gentleman

ஜென்டில்மேன்: 1993ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான ஷங்கர் தமிழ் சினிமாவை பிரம்மாண்டத்தில் மூழ்கடித்து ஒரு புயலை உருவாக்கினார். அவர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் 1993ம் ஆண்டு ஜூலை 30ந் தேதி இதே நாளில் வெளியானது. இப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மதுபாலா நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

வசூலை அள்ளிய படம்: ஜென்டில்மேன் படத்தை திரையரங்கில் பார்த்த அத்தனை பேரும் திரையரங்கில் வெளிப்பட்ட கொண்டாட்டத்தை என்றைக்கும் மறந்து இருக்க முடியாது. ஜனரஞ்சகமான படத்தில் இருக்கவேண்டிய சுவாரசியத்தின் அளவை தனது முதல் படத்திலேயே அதிகரித்துவிட்டார். அடுத்தடுத்து கதையில் வரும் திருப்பங்கள், படத்தின் இறுதி வரை குறையாத சுவாரசியம், சிக்கு புக்கு ரயிலு, பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத்த பாக்காதே, என ஆட்டம் போட வைத்த பாடல் என அந்த ஆண்டில் வெளியான படத்தில் அதிக வசூலை அள்ளிய படமாக ஜென்டில்மேன் இருந்தது.

Shankar completed 30 years in cinema after directing Gentleman

30 years of Shankar: இந்த படத்தின் மூலம் இயக்குநராக மாறிய ஷங்கர் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜென்டில்மேன் படம் வெளியாக 30 ஆண்டுகளுக்கு பின் ஜென்டில்மேன் 2 படத்தை எடுக்க உள்ளது. இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X