ஷங்கர் 'தி பாஸ்'க்காக ஒன்று சேர்ந்த அட்லி, பாலாஜி உள்ளிட்ட இயக்குனர்கள் #25YearsOfDirectorShankar

By Siva

சென்னை: ஷங்கர் இயக்குனராகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில் அவரின் உதவியாளர்கள் அவரை கவுரவித்துள்ளனர்.

ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனர் ஆனவர் ஷங்கர். அந்த படம் 1993ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி ரிலீஸானது. ஷங்கர் இயக்குனர் அவதாரம் எடுத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

25 ஆண்டுகளாக கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். இது சாதாரண விஷயம் அல்ல.

 வெற்றி

வெற்றி

வெற்றித்திருமகளின் ஆசி ஷங்கருக்கு உள்ளது. அதனால் தான் அவரால் தொடர்ந்து வெற்றிப் படங்களை அளிக்க முடிகிறது. வெற்றியின் மறுவார்த்தையாக இருக்கிறார் ஷங்கர். அவர் படத்தில் நடிக்க அனைத்து நடிகர்கள், நடிககைள் ஏங்குகிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் நடித்துவிட்டால் மிகப் பெரிய பெயர் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

டிரெண்ட்

ஷங்கரின் சாதனை தினத்தன்று #25YearsOfDirectorShankar என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. ரசிகர்கள் ஷங்கரின் வெற்றிப் படங்களை நினைவுகூர்ந்தனர்.

அட்லி

அட்லி, பாலாஜி சக்திவேல் உள்பட ஷங்கரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் குருவை கவுரவப்படுத்தினார்கள். அதை பார்த்து நெகிழ்ந்துபோன ஷங்கர் அந்த நிகழ்வின்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர்

அது எப்படி சார் கில்லியா எப்பொழுதுமே வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? வெற்றியின் ரகசியத்தை ஷங்கரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்ல சமூக அக்கறையுடனும் படங்கள் எடுப்பவர் ஷங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X