புஷ்பா 2ல இருக்க மாதிரி தீமிதி சீன்.. சாமி பாட்டு எல்லாத்தையும் வச்ச ஷங்கர்.. அப்போ இந்தி வசூல்?
சென்னை: கண்ணதாசன் நடித்த கறுப்பு பணம் படத்தின் மாடர்ன் வெர்ஷனாகவே ஷங்கர் ஜென்டில்மேன் படத்தை இயக்கியிருந்தார் என அப்போதே அவர் மீது சில விமர்சனங்கள் வெளியானாலும் ஷங்கரின் பிரம்மாண்ட மேக்கிங் காரணமாக அவரை பலரும் பாராட்ட ஆரம்பித்தனர். எந்திரன் படத்தை ஷங்கர் இயக்கும் போது அர்னால்டு நடித்த டெர்மினேட்டர், வில் ஸ்மித் நடித்த ஐ ரோபோ, டி வார் படத்தின் அந்த பாம்பு சீன் என பல காட்சிகள் காப்பியடிக்கப்பட்டதாக சர்ச்சைகள் வெடித்தன.
பியூட்டி அண்ட் தி பீஸ்ட் படத்தில் இருந்தே இன்ஸ்பிரேஷன் ஆகித்தான் ஐ படத்தையும் ஷங்கர் இயக்கியிருந்தார். "என்னோடு நீயிருந்தால்" பாடலும் அதற்கு சான்றாகவே அமைந்தது. ஷங்கர் அட்லீ எல்லாம் கிடையாது என்றும் அட்லீக்கே குரு என தற்போது ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

சினிமாவில் சாமி சென்டிமென்ட் காட்சிகளை வைத்தே இந்தி ரசிகர்களை கவர்ந்து கல்லா கட்டி வருவதாக விமர்சனங்கள் கிளம்பி வரும் நிலையில், புஷ்பா 2 படத்தின் காட்சிகளையும் ஷங்கர் சுட்டு வைத்திருக்கிறார் என கலாய்த்து வருகின்றனர்.
ரவுடியை சாமியாக்கி வசூல் வேட்டை: புஷ்பா படத்தில் செம்மரக் கடத்தல் கொள்ளைக்காரனாக காட்டப்பட்ட அல்லு அர்ஜுனை 2ம் பாகத்தில் கங்கம்மா வேஷம் போட்டு கிளைமேக்ஸில் ராஷ்மிகா மந்தனா உனக்குள்ள கங்கம்மா இருக்கா மாமா எல்லாரையும் கொன்னு போடு என சொல்லி அனுப்பும் சீனில் இருந்து கிளைமேக்ஸ் வரை சாமி சீனை காட்டியே பாலிவுட்டில் 800 கோடிக்கும் அதிகமான வசூலை புஷ்பா 2 எடுத்தது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், அதே ஃபார்முலாவை ஷங்கரும் கேம் சேஞ்சர் படத்தில் பின்பற்றியுள்ளார் என்கின்றனர்.
தீமிதி சீன் வைத்த ஷங்கர்: புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் பெண் வேடமிட்டு தீமிதிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த ஒரு போர்ஷனுக்காகவே பல கோடி ரூபாயை கொட்டி சுகுமார் ராமநாராயணன் மற்றும் ராகவா லாரன்ஸ் படங்களில் வருவது போன்ற ஒரு சீனை எடுத்திருந்தார். இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் தனது கணவரின் திக்குவாய் குணமாக அஞ்சலி தீமிதிக்கும் காட்சிகளும், நாக்கு தேவதை சிலையை வைத்து பூஜை பண்ணும் காட்சிகளையும் வைத்து ஒரு சாமி பாட்டையும் ஷங்கர் உருவாக்கி வைத்திருக்கிறார்.
இந்தியில் வசூல் வேட்டை: முதல் நாளே கேம் சேஞ்சர் திரைப்படம் பெரிய ஹைப் இல்லாமலே 186 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் நிலையில், பொங்கல் விடுமுறையில் இந்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வசூல் வேட்டையை புஷ்பா 2 படத்தை போலவே அள்ளுமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











