அஜித்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் மோதலா?.. இதுவரை இருவரும் இணையாததற்கு இதுதான் காரணமா?
சென்னை : இயக்குநர் ஷங்கர் அஜித்தை வைத்து இதுவரை படம் எடுக்காததற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்
தமிழில் சினிமாவில் பல திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகளை விமர்சனம் செய்து மிகவும் பிரபலமானார். சினிமாவில் பல சுவாரசியமான விஷயங்களை யூடியூப் சேனலில் பேசிவருகிறார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், அர்ஜூன், பிரசாத், விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விக்ரம் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி உள்ளார். கமல்ஹாசனை வைத்து இந்தியன் திரைப்படத்தை இயக்கினார். இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது இந்தியன் 2 உருவாகி வருகிறது. படப்பிடிப்பில் கிரைன் விழுந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இதன் படப்பிடிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் பாதியில் நின்றது
முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுக்கும் ஷங்கர், இதுவரை அஜித்தை வைத்து மட்டும் படம் எடுக்காதது குறித்து, சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜீன்ஸ் திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக ஒப்பந்தமானவர் அஜித்குமார் தான் என்றும், மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஷங்கருக்கும் அஜித்திற்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு படம் பாதியில் நின்று போனதாகவும் கூறினார்.

ஜீன்ஸ் வசூலை வாரிக்குவித்தது
இதையடுத்தே, அந்த திரைப்படத்தில் பிரசாத்தை நடிக்க வைத்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக்குவித்தது. இரட்டை வேட கதாபாத்திரத்தை கிராஃபிக்ஸ் மூலம் கையாண்டு மக்களே அச்சரியப்படும் அளவுக்கு ஜீன்ஸ் படம் இருந்தது.

இதுதான் காரணம்
பிரம்மாண்டத்திற்கே பெயர் பெற்ற ஷங்கர் இசைவெளியீட்டு விழாவாகட்டும், ப்ரோமோஷனாகட்டும் அனைத்திலும் பிரம்மாண்டத்தை புகுத்தி அட்ராசிட்டி செய்துவிடுவார். ஆனால், அஜித் எந்த பிரம்மாண்டத்தையும் விரும்பாதவர் எப்போதும் இயல்பாகவே இருப்பார். அவர் நடிக்கும் நடத்தின் இசைவெளியீட்டு விழாவானாலும் சரி, ப்ரோஷனாலும் சரி அதில் அஜித் கலந்து கொள்ளவே மாட்டார் இதை அவர் ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கிறார். இருவரும் வெவ்வேறு திசையில் இருப்பதால் தான் இதுநாள் வரை ஷங்கர் அஜித் இணையவில்லை என்று பயில்வான் ரங்கதான் கூறினார்.


Click it and Unblock the Notifications











