உதவியாளருக்கு கைகொடுத்த இயக்குநர் ஷங்கர்…! 'கப்பலை' கரையேற்றினார்!!

By Mayura Akilan

தனது உதவியாளர் இயக்கிய படத்தை வெளியிட இயக்குநர் ஷங்கர் முன்வந்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரிடம் சிவாஜி, எந்திரன் படங்களில் உதவியாளராக பணியாற்றிவர் கார்த்திக் ஜி.கிரிஷ். தற்போது இவர் கப்பல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஐ ஸ்டூடியோ எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் 8 நண்பர்கள் இணைந்து கப்பல் படத்தை தயாரித்துள்ளார்கள்.

வைபவ் கதாநாயகன்

வைபவ் கதாநாயகன்

இந்தப் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனம் பரீத் நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், விடிவி.கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய இசையமைத்திருக்கிறார் நடராஜன் சங்கரன்.

எஸ் பிக்சர் நிறுவனம்

எஸ் பிக்சர் நிறுவனம்

‘கப்பல்' படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த இயக்குனர் ஷங்கர், தனது சிஷ்யரான இயக்குனர் கார்த்திக்கை மனதார பாராட்டியிருக்கிறார். அதோடு நில்லாமல் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி தன்னுடைய ‘எஸ்' பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் ‘கப்பல்' படத்தை வெளியிடவும் இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்

நீண்ட இடைவெளிக்குப் பின்

இது குறித்து குறிய இயக்குனர் ஷங்கர், "நீண்ட இடை வெளிக்கு பிறகு என்னுடைய எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் ஒரு திரைப்படத்தை வாங்கி உள்ளோம். என்னுடன் பல படங்களில் பணியாற்றிய கார்த்திக் இயக்கத்தில் தயாராகும் கப்பல் படத்தை பார்த்த பின்னர் அந்த படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்தேன்.

சிரிக்க வைத்த கப்பல்

சிரிக்க வைத்த கப்பல்

இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை சித்திரம். படம் ஆரம்பித்த போது சிரிக்க ஆரம்பித்த நான், இறுதி வரை சிரித்துக் கொண்டே தான் இருந்தேன்.

பெருமைப் பட்ட ஷங்கர்

பெருமைப் பட்ட ஷங்கர்

கப்பல் எல்லா தரப்பு மக்களையும் கவரும் என்பதில் சிறிதளவும் ஐயமே இல்லை. தமிழகம் மொத்தமும் இந்த படத்தை ரசித்துக் கொண்டாடும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய உதவியாளரின் படத்தை வாங்கி வெளியிடுவதில் எனக்கு மிகவும் பெருமை." என்றார்.

தொடர் தோல்விகள்

தொடர் தோல்விகள்

இயக்குனர் ஷங்கர், எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன்மூலம் சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு சமயத்தில் தான் தயாரித்த படங்கள் அனைத்தும் தொடர் தோல்விகளை சந்திக்கவே படம் தயாரிப்பதை தவிர்த்துவிட்டார் ஷங்கர். தற்போது உதவியாளரின் படத்தை வாங்கி வெளியிட்டு கப்பலை கரையேற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X