ப்ளூ சட்டை மாறன் கிண்டலுக்கு தரமான பதிலடி கொடுத்த ஷங்கர்.. இந்தியன் தாத்தா வயது குறித்து விளக்கம்!
சென்னை: இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே குவிந்து வருகின்றன. ஒரு பக்கம் ரசிகர்கள் இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் படம் தாறுமாறாக உள்ளது என்றும் இந்தியன் தாத்தாவை சூப்பர் மேன் ரேஞ்சுக்கு ஷங்கர் சார் வடிவமைத்து இருப்பது ரசிகர்களுக்கு தியேட்டரில் செம ட்ரீட்டாக இருக்கும் என கொண்டாடி வருகின்றனர்.
மறுபுறம் நெட்டிசன்கள் இந்தியன் தாத்தாவை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என கிண்டல் செய்து கலாய்த்து வருகின்றனர். மேலும், ப்ளூ சட்டை மாறன் 106 வயதில் இந்தியன் தாத்தா ஏரில் பறந்து பறந்து சண்டை போட முடியுமா? என பங்கமாக கலாய்த்துள்ளார்.

இந்நிலையில், இந்தியன் தாத்தாவின் வயது என்ன என்கிற கேள்விக்கு ஷங்கர் அளித்த பதில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், கமல்ஹாசனும் இந்தியன் தாத்தா வயது குறித்து அட்டகாசமாக பேசியுள்ளார்.
சந்துரு கமல் தான் தாத்தாவா?: இந்தியன் தாத்தாவுக்கு 106 வயதிருக்கும் அவர் எப்படி இப்படி சண்டை போட முடியும். கண்டிப்பாக இது சந்துரு கமல் தான் என நெட்டிசன்கள் புது கதையை உருட்ட, சித்தார்த் இந்தியன் தாத்தா போல வேடமிட்டு அநீதிகளை தட்டிக் கேட்கலாம் என்று இன்னொரு கதையையும் ரசிகர்களே ஊகித்து வருகின்றனர். ஒருவரும் ஷங்கர் என்ன கதையை பண்ணி வைத்திருக்கிறார். அதை பொறுமையுடன் பார்ப்போம் என நினைக்கவில்லை.

ப்ளூ சட்டை மாறன் கலாய்: "ஆக.. இந்தியன் 2 வில் பறந்து பறந்து சண்டை போடும் தாத்தாவின் வயது 106." என ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார். இந்நிலையில், இந்தியன் தாத்தாவின் வயது குறித்து ஷங்கரே விளக்கம் கொடுத்துள்ளார்.
120 வயதிலும் நடிப்பேன்: 106 வயதில் ஒருவரால் இப்படி முரட்டுத்தனமாக சட்டையெல்லாம் கழட்டி ஐ படத்தில் விக்ரம் ஜிம் பாய்ஸ் அடித்து பொளப்பது போல நடிக்க முடியுமா என்கிற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், 120 வயதிலும் நான் நடிப்பேன் என கமல்ஹாசன் ஒரே போடாக போட்டுள்ளார்.
ஷங்கர் சொன்ன விளக்கம்: சீனாவில் உள்ள தற்காப்பு கலை மாஸ்டர் லூசி ஜியான் 120 வயதிலும் மார்ஷியல் ஆர்ட்ஸை பர்ஃபார்ம் செய்துள்ளார். இந்தியன் 2 படத்தில் இந்தியன் தாத்தாவை வர்ம கலையின் தலை சிறந்த மாஸ்டராகவே காட்டப் போகிறோம். அதனால், அவரால் 106 வயதிலும் சண்டை போட முடியும் என விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால், தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்கள் எந்தளவுக்கு இதை நம்பி படத்தை வெற்றியடைய வைப்பார்கள் என்பது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











