குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடும் சீனியர் இசையமைப்பாளர்!
குத்துப்பாடல் ஒன்றில் டான்ஸ் ஆடப் போகிறார் 65 வயது சீனியர் இசையமைப்பாளர். அவர்... நிறையப் படங்களில் இசையமைப்பாளராகவே தோன்றிய (சங்கர்) கணேஷ்.
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகின்றன.
அவரது 50 ஆண்டு கால கலைச்சேவையை பாராட்டியும், அவரது 65-வது பிறந்த நாளையும் கொண்டாடி, அவரை கௌரவிக்கும் விதமாக 48 மணி நேர உலக சாதனை இசை நிகழ்ச்சி ஒன்று சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலு ஆனந்த், நடிகர் சின்னிஜெயந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வந்து இசையமைப்பாளர் கணேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவரது பணிகளை நினைவு கூர்ந்தனர்.
இந்த விழாவில் ஸ்ரீகிருஷ்ணாவின் ஸரிகமபதநி இசைக்குழுவினர் சங்கர்-கணேஷ் இசையமைத்த பாடல்களைப் பாடினர்.
கணேஷ் பேசும்போது, "1963-ம் ஆண்டு 'மகராசி' என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.
'ஒத்தையடி பாதையிலே' என்ற படத்தைத் தொடர்ந்து ஏழு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளேன். 'ஜெகதல பிரதாபன்' 'நான உன்ன நெனச்சேன்' போன்ற படங்களையும் இயக்கியுள்ளேன். 'சட்டம் ஒரு இருட்டறை', தேவியின் திருவிளையாடல்', 'வரவேற்பு' ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடித்தேன்.
இப்போது 'பப்பு கொப்பம்மா', 'கருவேலன்', 'இயக்குனர்' போன்ற படங்களுக்கு இசையமைக்கிறேன். இதுதவிர தற்போது 'வின்' என்ற படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியிருக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











