இளையராஜாவை மன்னிக்கவே மாட்டேன்..சொத்து எல்லாம் போச்சு.. பிரபல இசையமைப்பாளரின் மருமகள் ஆதங்கம்
சங்கரின் மருமகளும் சர்வதேச இசை பள்ளியின் நிறுவனருமான அஹ்லாயூ வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என் அப்பாவிற்கு இசையின் மீது மிகப்பெரிய காதல் இருந்தது அந்த காதல் எனக்கும் வந்துவிட்டது அதனால் தொடர்ந்து இசை குறித்து பல விஷயங்களை தேடித்தேடி படித்தேன் இப்போதும் படித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு குருவாக இருக்கும் போது அனைத்து விஷயங்களையும் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஒரு மாணவன் நம்மிடம் வரும் போது அவர்களுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுப்பவராக குரு இருக்க வேண்டும். 2004ம் ஆண்டு இசை பள்ளியை ஆரம்பிக்கும் போது, ஒருவிதமான பயம் இருந்தது. ஆனால், தற்போது அது பெரிய அளவில் வளர்ந்து சர்வதேச இசை பள்ளியாக வளர்ந்துள்ளது என்றார்.
எல்லாமே போச்சு: அப்பாவின் பெயர் ஆர் வெங்கடேசன் சினிமா துறையில் அவரை தெரியாதவர்களே இல்லை, என் அப்பாவும் இசைஞானி இளையராஜா அவர்களும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து 1980ம் ஆண்டு ஒரு இசைப்பள்ளியை தொடங்கினார்கள். அதில் ஏற்பட்ட கஷ்டம், என் அப்பாவின் மீது விழுந்தது. என் அப்பாவால் அப்போது அந்த பிரச்சினையை எதிர்த்து சண்டை போட முடியவில்லை. அதன் பிறகு தான் எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது. ஒரு சின்ன ஓலைகுடிசையில் கரெண்ட் இல்லாமல் இருந்தோம், அதன் பிறகு என்னுடைய தந்தை பத்து வருடமாக அந்த வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால், அந்த வீட்டிற்குள், அவரை சுற்றி எப்போதும் புத்தகங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் அ அவர் படித்தது பற்றி என்னிடம் தான் சொல்லுவார்.

இசை கொடுத்த வாழ்க்கை: அத்தியாவசிய தேவைக்கு கூட கரண்ட் இல்லாமல் வீட்டில் இருந்த நான், இன்று ஏசி, கார் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வாழ்க்கையை கொடுத்தது எது என்றால் இசை, இசையை ஒரு முறை சுவாசித்து விட்டால், அந்த இசை என்னவெல்லாம் கொடுக்கும் என்பதற்கு உதாரணம் தான், நான் என்று அந்த பேட்டியில் அஹ்லாயூ கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











