twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Vanakkam thamizha : அப்பவே கானா பாட்டு நாங்க போட்டுட்டோம்: சங்கர் கணேஷ்

    |

    சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் வந்திருந்தார். ஆயிரம் பாடல்களுக்கு இசை, ஐம்பது வருடங்கள் சினிமா துறையில் இருந்த அனுபவம் என்று அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

    அப்பா சினிமா துறையில் இருந்ததால், சின்ன பையனா இருந்த இவரை அழைத்துக்கொண்டு போய், விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிடமும் விட்டாராம். பையன் நல்லா பாடுவான், டிரெயின் பண்ணுங்கன்னு சொன்னாராம்.

    பாடுன்னு சொல்லி இருவரும் கேட்க, அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்குன்னு கர்நாடக சங்கீதத்தில் அமைந்த பாடலை பாடினாராம். ரெண்டு பேரும் சிரிச்சுட்டாங்களாம்.

    கண்ணதாசன் தேவர்

    கண்ணதாசன் தேவர்

    தேவருக்கு கவிஞர் கண்ணதாசன் என்றால் பிரியமாம்.ஒரு படம் பண்ணலாம்னு நானும் சங்கரும் இருக்கோம்னு கவிஞரிடம் சொல்ல, அவர் தேவரிடம் அழைத்துச் சென்றாராம்.சின்ன பசங்களா இருக்காங்க... இவங்க எப்படின்னு தேவர் ஐயா இழுக்க, இல்லை நல்லா பண்ணுவாங்கன்னு சொன்னாராம். அதே மாதிரி அடுத்தடுத்து தேவர் பிலிம்ஸுக்கு படம் பண்ணினேன் என்று சொன்னார்.

    அடம் பிடித்த எம்ஜிஆர்

    அடம் பிடித்த எம்ஜிஆர்

    நான் ஏன் பிறந்தேன் படத்தில் இசை அமைக்க சங்கர் கணேஷ்தான வேண்டும் என்று எம்ஜிஆர் சொல்ல, இவரின் மாமனார் அந்த படத்தின் இயக்குநராம். வீட்டோட மாப்பிள்ளையா தங்கி இருந்த தனது மாப்பிள்ளைக்கே வாய்ப்பு குடுத்து இருக்கார்னு பேச்சு வரும் என்று மாமனார் வேற இசை அமைப்பாளர் போட்டுக்கலாம்னு சொல்ல,எம்ஜிஆர் பிடிவாதமாக இருந்தாராம். அப்படி இசை அமைத்த படம் நான் ஏன் பிறந்தேன்.

    குட்டி பத்மினியுடன் கமல்

    குட்டி பத்மினியுடன் கமல்

    நடிகர் கமல்ஹாசன் முதன் முதலில் டூயட் பாடி நடிச்சதும் இவரது இசையில் உருவான பாடலில்தான். அதுவும் ஜோடி சேர்ந்து நடிச்சது குட்டி பதமினி. விசில் அடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளான்னு ஒரு பாடல். நடிகர் சிவகுமார் நடிச்ச ஆட்டுக்கார அலமேலு படத்தில் பருத்தி எடுக்கையிலே பாடல் இப்படி பல பாடல்கள்.

    கானா பாடல் முதலில்

    கானா பாடல் முதலில்

    முதன் முதலில் கானா பாடல் போட்டதும் நாங்கதான்னு சொல்லும் இவர், வா மச்சான் வா வண்ணாரப் பேட்டை, என்னாடி முனியம்மா உன் கண்ணுல மையி போன்ற பாடல்களை பாடி காண்பித்தார்.

    உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் பாடல், மற்றும் என்னாடி முனியம்மா பாடல் மலேசியா சிங்கப்பூர் மக்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்.

    English summary
    Music director Shankar Ganesh was the guest of honor on Sun TV's Hello Tamil program. He shared many interesting things, including music for a thousand songs, and fifty years of experience in the film industry
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X