twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்திரன் கதை திருட்டு வழக்கு: ஷங்கர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

    எந்திரன் கதை திருட்டு வழக்கில் நாளை ஆஜராக இயக்குனர் ஷங்கருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    |

    சென்னை: எந்திரன் திரைப்பட கதை திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கர் நாளை ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இந்தப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

    Shankar has to appear in court tomorrow!

    2010 ஆம் ஆண்டு எந்திரன் ரிலீஸ் ஆனபோது, அந்த படத்தின் கதை தன்னுடையது எனவும், நஷ்ட ஈடாக ரூ.1 கோடி தர வேண்டுமெனவும் வழக்கு தொடர்ந்தார் எழுத்தாளர் ஆரூர்

    7 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடந்து வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தன் தரப்பு ஆதாரங்களை ஷங்கர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டார்.

    இந்த வழக்கின் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை கடந்த ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஷங்கரின் உதவியாளர் யோகேஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    ஷங்கரின் உதவியாளர் யோகேஷ் சாட்சியளிக்க வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கதை திருட்டு தொடர்பாக ஷங்கர் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் எழுத்தாளர் ஆரூர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நாளை இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது

    ரஜினிகாந்த், அக்ஷய் குமர், ஏமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள எந்திரன் 2.0, இந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai high court has ordered director Shankar to appear in court tomorrow in connection with Enthiran story theft case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X