3.0 எடுக்க ஆசை தான், ஆனால் அதுக்கு...: ஷங்கர் ஓபன் டாக்
Recommended Video

சென்னை: 3.0 படம் எடுக்கும் திட்டம் உள்ளது என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. படத்தை லைகா நிறுவனம் அமோகமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 2.0 பற்றி ஷங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஐஸ்வர்யா ராய்
2.0 வித்தியாசமான கதை, கதாபாத்திரங்கள் கொண்ட படம். அதனால் தான் எந்திரனில் நடித்த ஐஸ்வர்யா ராயை இந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை. புது கதாபாத்திரம் என்பதால் ஏமி ஜாக்சனை நடிக்க வைத்தோம். இருப்பினும் 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் குறித்து சொல்லப்படும்.

3.0
3.0 படம் எடுக்கும் ஐடியா உள்ளது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதில் நடிக்க சம்மதித்தால் மட்டுமே எடுப்பேன். சிட்டி கதாபாத்திரத்தில் ரஜினி சாரை தவிர வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவர் அவ்வளவு அழகாக பொருந்தியுள்ளார். சரியான ஸ்க்ரிப்ட் அமைந்தால் 3.0 உருவாகும்.

ரோபோ
அடுத்த பாகம் எடுக்க வேண்டும் என்பதற்காக 3.0 படம் எடுக்க நான் விரும்பவில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சிட்டி மூலம் அவர்களை மகிழ்விக்க விரும்புகிறேன். சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் போன்று நம் நாட்டில் ரோபோ இருக்க விரும்புகிறேன் என்கிறார் ஷங்கர்.
அக்ஷய் குமார்
2.0 படத்தை லைகா நிறுவனம் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அக்ஷய் குமார் தன் பங்கிற்கு ட்விட்டரில் விளம்பரம் செய்து வருகிறார். ட்விட்டரில் அவரை 28.6 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











