»   »  ஷங்கர் எல்லாம் ஒரு இயக்குனரே அல்ல: 2.0 வில்லன் சுதான்ஷு

ஷங்கர் எல்லாம் ஒரு இயக்குனரே அல்ல: 2.0 வில்லன் சுதான்ஷு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் எல்லாம் ஒரு இயக்குனரே அல்ல அவர் ஒரு விஞ்ஞானி. அவர் போன்று சிந்திக்க, நடந்து கொள்ள விஞ்ஞானிகளால் மட்டுமே முடியும் என்று 2.0 பட வில்லன் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.

அஜீத்தின் பில்லா 2 படத்தில் வில்லனாக நடித்தவர் சுதான்ஷு பாண்டே. தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பிரபல செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

ரஜினி

ரஜினி

ரஜினி சார் மிகவும் தன்னடக்கமானவர். அனைத்துக்கும் புன்னகை புரிவார். அவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்வார். அவரால் மட்டும் எப்படி இவ்வளவு அன்பாக இருக்க முடிகிறது?

முடியாது

முடியாது

ரஜினி போன்று பெரிய ஸ்டாராக இருந்து இப்படி அன்பாக நடந்து கொள்வது நிச்சயம் சாத்தியம் இல்லை. நான் பார்த்த மனிதர்களிலேயே சிறந்தவர் ரஜினி தான்.

ஷங்கர்

ஷங்கர்

ஷங்கர் எல்லாம் ஒரு இயக்குனரே அல்ல அவர் ஒரு விஞ்ஞானி. அவர் போன்று சிந்திக்க, நடந்து கொள்ள விஞ்ஞானிகளால் மட்டுமே முடியும். சினிமா துறையில் உள்ள பிரபலங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.

தமிழ் படங்கள்

தமிழ் படங்கள்

தமிழ் படங்களில் பணியாற்றுவது அருமையான அனுபவமாக இருந்து வருகிறது. 2.0 படத்தில் நான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பேன் என ஷங்கர் நினைத்தார். என்னுடைய கதாபாத்திரம் பற்றி விரிவாக கூற முடியாது.

அஜீத்

அஜீத்

பில்லா 2 படத்திற்கு பிறகு நானும், அஜீத்தும் நண்பர்களாகிவிட்டோம். நானும், அஜீத்தும் சகோதரர்கள் போன்றவர்கள். நாங்கள் இருவரும் சேர்ந்தால் ரேஸ் பற்றி பேசுவோம். வாழ்க்கை மற்றும் ஆன்மீகம் பற்றி மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம்.

Read more about: shankar ஷங்கர்
English summary
2.0 villain Sudanshu Pandey said that Shankar is not a director but a scientist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil